Anandha Kannan
சன் டிவியில் தொகுப்பாளரான ஆனந்த கண்ணனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூர் தமிழன் ஆனந்த கண்ணன். இவர் சிங்கப்பூரில் ஒளிபரப்பாகி வந்த வசந்தம் டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

அதன் பின்னர் ரேடியோ ஜாக்கியாக சென்னை வந்த இவர் சன் ம்யூசிக்கில் தொகுப்பாளராகவும் ஆனார். மேலும் விக்ரமாதித்தன் என்ற சீரியலில் நடித்து 90’ஸ் குட்டிகளின் பேவரைட் ஆனார்.

இதனையடுத்து வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் மேலும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்தார். ஆனால் இதெல்லாம் கை கொடுக்காததால் மீண்டும் பழைய சிங்கப்பூர் சேனலான வசந்தம் டிவியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆனந்த கண்ணனுடன் பிக் பாஸ் பிரபலமான காஜல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். அதனை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.