Thalapathy 64
தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல டிவி சேனலான சன் டிவி கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு மற்றும் பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளனர். பொதுவாகவே சன் நெட்ஒர்க் ப்ரோமோஷன்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் என்பதால் நிச்சயம் தளபதி 64 ஆட்டமும் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.