பிக் பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற சிவகுமார்.. சுஜா வருணி போட்ட பதிவு..!
சிவக்குமார் குறித்து சுஜாவரணி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்தனர். அதில் ஒருவர் சிவகுமார். இவர் நடிகர் சிவாஜியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி சுஜா வருணி சிவக்குமார் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அன்புள்ள அத்தான் இறுதியாக நல்ல காலம் உதயமாகிறது இது உங்களுக்கான தருணம் நீங்கள் ராக்ஸ்டார் ஐ போல எப்படி மகிழ்விப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியும். இது இந்த பயணத்தை தழுவி உங்களில் அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கவும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி நீங்கள் யார் என்பதை இந்த உலகுக்கு காட்ட என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram