ரவி மோகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சுதா கொங்காரா போட்ட பதிவு.!!

ரவிமோகனின் பிறந்தநாளுக்கு சுதா கொங்காரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சுதா கோங்காரா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ரவி மோகனுக்கு பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் இயக்குனரான சுதா கோங்காரா புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரவிமோகன் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தில் தேடினால் அங்கு ரவி இருப்பார் எனவும் பதட்டமின்றி கதாபாத்திரத்திலும் காட்சியிலும் 200 சதவீதம் கொடுப்பார் என கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் என் அழகான ஜென்டில்மேன் நடிகரே உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இனிய நேரங்கள் அமைய வாழ்த்துக்கள் எனவும் கூறி பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram