அஜித்தை இயக்கப் போகிறேன் என செய்தியை படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது என கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார் முன்னணி இயக்குனர் ஒருவர்.

Sudha Kongara About Ajith Movie : தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று உட்பட சில படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. இந்த நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக கேஜிஎப் படத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார் இல்லை சிம்பு நடிக்கிறார் இவர்கள் இருவரும் இல்லை அஜித் நடிக்கிறார் என தொடர்ந்து வித விதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படியான நிலையில் சுதா கொங்கரா அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் அடுத்ததாக சூர்யாவைத்தான் இயக்க உள்ளேன். அது சூரரைப்போற்று படம் போல பயோபிக் திரைப்படம் கிடையாது என கூறியுள்ளார்.

மேலும் அஜித் மற்றும் சிம்புவை இயக்கப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தியை படித்து ஜாலியாக என்ஜாய் செய்தேன். ஆனால் அவை உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.