STR Dropped Movies Details
STR Dropped Movies Details

சிம்பு தவறவிட்ட டாப் 10 திரைப்படங்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

STR Dropped Movies Details : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு.

இவரைச் சுற்றி இன்று வரை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதேபோல் சிம்பு நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி ட்ராப் ஆன திரைப்படங்கள் பல உள்ளன.

அவைகளில் சில திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

  1. வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை. முதலில் இந்த படத்தில் சிம்பு தான் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. கெட்டவன்

வல்லவன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கெட்டவன் இந்தத் திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாதி அளவில் நடந்து இருந்த நிலையில் அதன் பின்னர் படம் கைவிடப்பட்டது.

  1. வேட்டை மன்னன்

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் முதல் படமாக வேட்டை மன்னன் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. இப்படத்தின் டீசர் கூட வெளியான நிலையில் படம் கைவிடப்பட்டது.

ப்பா என்ன எனர்ஜி.. வாத்தி கம்மிங் பாட்டுக்கு சுட்டிகுழந்தை ஆடிய நடனம் – படக்குழுவை மிரள வைத்த வீடியோ

  1. கான்

செல்வராகவன் இயக்கத்தில் கான் என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருந்த அதன் பின்னர் இந்த படம் கைவிடப்பட்டது.

  1. கோ

கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கோ. இந்த படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க இருந்தார்.

  1. ஏ சி

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் சிம்பு மற்றும் அசின் ஆகியோர் இணைந்து ஏசி என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக நடந்து முடிந்ததோடு படம் கைவிடப்பட்டது.

  1. வேட்டை

ஆர்யாவும் மாதவனும் இணைந்து நடித்திருந்த வேட்டை படத்தில் முதலில் சிம்பு நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. பில்லா 2018

பில்லா 2018 என்ற பெயரில் படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்போடு இப்படமும் கைவிடப்பட்டது.

  1. AAA-2

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான AAA திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம், மப்டி படத்தின் ரீமேக் போன்ற படங்களும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.