Sri reddy in bigg boss 3 | Bigg Boss 3 Tamil | Bigg Boss 3 Telugu, Kamal Haasan, Star Vijay, Vijay TV, Tamil CInema News, Telugu News
Sri reddy in bigg boss 3 | Bigg Boss 3 Tamil | Bigg Boss 3 Telugu

Sri reddy in bigg boss 

சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டியிடமும் இதில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊதிய கவர்ச்சி நடிகை – யாருனு நீங்களே பாருங்க.!

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினியும் இரண்டாவதாக ஜாங்கிரி மதுமிதாவும் தேர்வாகியுள்ளனர்.

இது ஒரு பக்கமிருக்க சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டியிடமும் இதில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அப்டேட் செய்த ஸ்ரீ ரெட்டி நான் பிக் பாஸ் தமிழ் அல்லது தெலுங்கு நிகழ்ச்சியில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என கேட்டிருந்தார் அதற்கு அவருடைய ரசிகர்கள் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதையே கோரஸாக கூறியிருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் தான் புகார் அளித்த பிரபலங்களும் அதில் போட்டியாளர்களாக பங்கேற்க வேண்டும் என கூறியிருந்தார்.

எது எப்படியோ ஸ்ரீரெட்டி பங்கேற்றால் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் இருக்கும்.