Sradha Srinath to Pair up with Vishal | The second part of the film is getting ready now. But Anand, director of the film, | Thala Ajith | Nerkonda Paarvai

Sradha Srinath to Pair up with Vishal :

இரும்புத்திரை 2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

தளபதி 64 படத்தின் டைட்டில் மற்றும் ஜானர் குறித்த சுவாரஸ்ய தகவல்!

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இரும்புத்திரை. இணையத்திற்கு பின்னால் இருக்கும் சதி வேலைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறதாம். ஆனால் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம்.

இந்த தகவலை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

தற்சமயம் சுந்தர் சி படத்தின் பணிகளில் இருக்கும் விஷால் அதன் பணிகள் முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.