Soorarai Pottru Movie Running Time
Soorarai Pottru Movie Running Time

சூரரைப் போற்று படத்தின் ரன்னிங் டைம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Soorarai Pottru Movie Running Time : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இந்த படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணதி பாலமுரளி நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரிலீஸுக்கு முன்னரே 100 கோடி வசூலித்த சூரரைப் போற்று.. சூர்யா செய்த நிதி உதவி ‌- கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.!!

இந்த படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவை இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் சூரரைப்போற்று திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

சூரரைப் போற்று திரைப்படம் 2 மணிநேரம் 33 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.