Soorarai Potru Rejected in Golden Globe Award

கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் இறுதி சுற்றில் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soorarai Potru Rejected in Golden Globe Award : உலக சினிமாக்களை முக்கியமாக கருதப்படுவது கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகள். இந்த இரண்டு விருதுகளுக்காக தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக இந்த விருதுகளுக்கு திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மட்டும்தான் பரிந்துரைக்கப்படும். கொரானா காரணமாக இந்த வருடம் OTT ரிலீஸான படங்களையும் பரிந்துரைக்கலாம் என தளர்வு அளிக்கப்பட்டது.

இதனால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

கோல்டன் க்ளோப் விருதுக்கான மூன்று சுற்றுகளில் இரண்டு சுற்றுகளை வெற்றிகரமாக கடந்தது சூரரைப்போற்று.

மூன்றாவது சுற்றில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை. நாமினேசன் லிஸ்டில் திரைப்படம் இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதிலாவது இப்படம் தேர்வாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.