அமேசான் பிரைம் வீடியோவை தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Soorarai Potru in Theatres : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யாவின் மீது கடும் கோபம் அடைந்தனர்.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாக்கியுள்ள ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக OTT-ல் தான் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள காரணத்தினால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தால் சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.