Sneha And Dhanush

Sneha Dhanush Movie : அடம் பிடித்து வந்த சினேகாவை ஒரே படத்தில் அடக்கி விட்டார் தனுஷ் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு, நடனம்,. தயாரிப்பு, பாட்டு என அனைத்திலும் பட்டய கிளப்பி வரும் இவர் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்திலும் கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடிக்க சினேகா ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித், விஜய் கிட்ட இத கேட்பேன், அவர் கிட்ட லவ் யூ சொல்லிடுவேன் – மேகா ஆகாஷ் ஓபன் டாக்.!

1990-களில் அஜித், விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து செட்டிலானார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் ரி என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் அந்த கதாபாத்திரம் நீண்ட நேரம் வரும் கதாபாத்திரமாக இல்லாமல் போனது. இது குறித்த அதிருப்தியை கூட சினேகா பதிவு செய்திருந்தார்.

அதன் பின்னர் நாயகியாகவோ அல்லது வலுவான கதாபாத்திரத்திலோ தான் நடிப்பேன் என அடம் பிடித்து வந்தார்.

அஜித், விஜய் கூட வேணா, இவரோட முத்த காட்சியில் நடிக்க தயார் – தமன்னா ஓபன் டாக்.!

ஆனால் தற்போது தனுஷுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். இப்படத்தின் படக்குழுவினர் அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் அப்பா தனுஷுக்கு ஜோடியாக தான் நடிக்கிறீர்கள். வலுவான கதாபாத்திரம் தான் என சினேகாவை சமாதானம் செய்து படக்குழு அவரது கால்ஷீட்டை வாங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.