சிவகார்த்திகேயன் பட டைட்டிலாக மாறி உள்ளது கமலின் பாடல் வரி. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான ஆவியுடன் அயர்லாந்து ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது உலகநாயகன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

அது மட்டும் இன்றி இப்படத்தில் மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டப் பணிகளை நெருங்கி விட்ட நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் விருந்தாக பிப்ரவரி 17ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெறும் போர் கொண்ட சிங்கம் பாடலின் வரியை டைட்டிலாக வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்த படம் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  ‌ 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.