SK 15

SK 15 Title : சிவகார்த்திகேயனின் 15-வது திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் கிடுகிடுவென உயர்ந்து முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நேற்று இன்று நாளை இயக்குனருடன் ஒரு படத்திலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் Mr. லோக்கல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

24 AM நிறுவனம் தயாரிக்க இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. படத்திற்கு ஹீரோ என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்க உள்ளார். மேலும் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.