நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan twitter post viral:

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை ஆர்வத்துடன் திரையரங்குகளில் கண்டு களித்து வரும் ரசிகர்கள் பாசிட்டிவான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படம் குறித்து ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், “ஃபேண்டஸி ஆக்சன் திரைப்படமாக மாவீரன் திரைப்படத்தை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் குழுவின் முயற்சியை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.. இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் கண்டு மகிழுங்கள்”. எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அப்பதிவை கண்ட ரசிகர்கள் படம் மிகப்பெரிய வெற்றி அடைய தங்களது வாழ்த்துக்களை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.