
மாவீரன் படம் எப்படி இருக்கு? என்னவெல்லாம் ரசிக்க வைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அதிதி சங்கர் நாயகியாக நடிக்க யோகி பாபு, சரிதா, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பரத் ஷங்கர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :
சென்னையில் காலம் காலமாக வசிக்கும் மக்களை நகர வளர்ச்சிக்காக வேறொரு இடத்துக்கு அப்புறப்படுத்துகின்றனர். மிகவும் மோசமாக கொஞ்சமும் தரமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பில் இவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந்த மக்களில் ஒருவராக இருந்தும் எதையும் எதிர்த்து கேட்காமல் அட்ஜெஸ்ட் செய்தும் கொள்ளும் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் அமைச்சராக வரும் மிஷ்கினை எதிர்த்து கேள்வி கேட்க தொடங்குகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடந்தது என்ன? மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :
சிவகார்த்திகேயன் வழக்கம் போல நம்ம வீட்டு பிள்ளையாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
மிஷ்கின் அமைச்சராக வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. யோகி பாபுவின் காமெடி கச்சிதமாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது.
அதிதி சங்கர், சரிதா போன்றவர்கள் படத்துக்கு தேவையான நடிப்பை அழகாக கொடுத்துள்ளனர்.
பரத் ஷங்கரின் பின்னணி இசை, பாடல்கள் ரசிக்க வைக்கும் வகையில் உள்ளன.
இயக்குனர் மடோன் அஸ்வின் வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்து திறம்பட இயக்கி உள்ளார்.
மொத்தத்தில் மாவீரன் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்
