ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சின்னத்திரை மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் பயணத்தை தொடங்கி அதன் பிறகு தொகுப்பாளர், காமெடி வேடம் என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பட்டத்தில் ஸ்டைலான லுக்கில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயனை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்காகவே அவர் நன்றி தெரிவித்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/C4IYWLYR8nq/?igsh=MWtvZjJvaTdtZGt5cg==