சிக்ஸ் பேக் உடன் இருக்கும் சிவகார்த்திகேயனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் “எஸ் கே 21” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்து வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சிக்ஸ் பேக் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கும் மிரட்டலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்