நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து அதித்தி சங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே வெளியான மான்கராத்தே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் இப்படமும் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.