சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் மடோன் அஸ்வினி இயக்கத்தில் உருவாகியிருந்த மாவீரன் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்கே 21 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக சீதா ராமம் படம் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான பிரபல பாலிவுட் நடிகை மிருணால் தாகூர் நடிக்க இருப்பதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.