நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் போனி கப்பூரிடமிருந்து விருது வாங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் தொடர்பான அப்டேட்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் மோஸ்ட் elegent personality என்ற விருதை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கப்பூரிடமிருந்து பெற்றுள்ளார். இது தொடர்பாக வெளியான புகைப்படம் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.