ஒரே அடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in Upcoming Movies Details : தமிழ் சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, வாழ் உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். படத்தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கிய தான் கடன் தொல்லையால் சிக்கி தவித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஒரேயடியாக 5 படங்களில் ஒப்பந்தமான சிவகார்த்திகேயன், ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா??

கடன் தொல்லையிலிருந்து விடுபட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்க ஒரே நேரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் என்ற கணக்கில் 5 படங்களுக்கு ரூபாய் 75 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் இந்த ஐந்து படங்களை இயக்க போவது யார் யார் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.