பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில், கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்..

Web Ads

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன், அதர்வா ஆகியோரும் நடித்து வருவது தெரிந்ததே.

அவ்வகையில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது படக்குழு.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இருவரும் பைக்கில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் ‘டியூட்’ படத்தில் அவர் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

முழுக்க காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது. மமிதா பைஜு, சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

sivakarthikeyan in a guest role pradeep ranganathan dude movie
sivakarthikeyan in a guest role pradeep ranganathan dude movie