சம்பள பாக்கியை தர வேண்டும் இல்லையென்றால் விக்ரம் பிரபு நடிக்கும் படங்களுக்கு தடை போட வேண்டும் என சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Sivakarthikeyan Complaint on Gnanavel Raja : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

சம்பள பாக்கியை தாங்க.. விக்ரம், சிம்பு, படங்களுக்கு தடை போடணும் - தயாரிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய சிவகார்த்திகேயன்.!!

விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கியை தர வேண்டும் என்று கேட்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தன்னுடைய சம்பளத்தில் பாக்கியுள்ள 4 கோடியை தர வேண்டும். அதுவரை விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் இவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்களை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் பிரபல தயாரிப்பாளர் எதிர்த்து இவ்வாறு வழக்குத் தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பள பாக்கியை தாங்க.. விக்ரம், சிம்பு, படங்களுக்கு தடை போடணும் - தயாரிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய சிவகார்த்திகேயன்.!!

சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜா தயாரிப்பில் தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் ஒரு திரைப்படம், சிம்புவின் நடிப்பில் 10 தல என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.