மூன்றாவது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்..!

மூன்றாவது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan birthday wishes for son pawan
sivakarthikeyan birthday wishes for son pawan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மதராசி மற்றும் பராசக்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடனும் நேரத்தை அதிகம் செலவிட்டு வருகிறார்.

ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது மூன்றாவது மகனான பவனுக்கு முதல் பிறந்த நாள் என்பதால் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

அதாவது எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹாப்பி ஃபர்ஸ்ட் பர்த்டே டியர் பவன் குட்டி என்று பதிவிட்டு உள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.