sivakarthikeyan

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கம் புதிய படமொன்றிலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் டைட்டில் எல்.ஐ.சி என நாம் ஏற்கனவே ஒரு தகவலை அறிவித்திருந்தோம்.

இதில்தான் தற்போது சிவகார்த்திகேயன் சிக்கலில் சிக்கியுள்ளார். அதாவது ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். தற்போது மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படம் ஹீரோ.

சிவா தயாரிப்பில் ரியோ நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் எப்போது?

இதுபோக விக்னேஷ் சிவன் பட பெயரும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் கடிந்து வருகிறது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன தளபதி 63 தயாரிப்பாளர் – காரணம் இது தான்.!

இதுவரை தமிழில் வேறெந்த முன்னணி நடிகரும் தொடர்ச்சியாக இப்படி மூன்று படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்ததில்லை. அதனால் சிவகார்த்திகேயனை தமிழ் திரையுலகை சேர்ந்த சீனியர்கள் மறைமுகமாக கடிந்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.