SK 17 Wishes

Thalapathy 63 Producer : தளபதி 63 தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொல்லி தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடின உழைப்பினால் முன்னேறி இன்று முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் Mr. லோக்கல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அடுத்து நேற்று இன்று நாளை இயக்குனருடன் ஒரு படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததை அடுத்து லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவுப்பு வெளியானது.

இந்த கூட்டணியில் உருவாக உள்ள படம் வெற்றி பெற வேண்டும் என தளபதி 63 தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.