Thalaivar 168 Movie Title
சிவாவும் ரஜினிகாந்தும் இணைய படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.

ரஜினியும் சிவாவும் முதல் முறையாக இணைந்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்திற்கு வியூகம் என டைட்டில் வைக்கலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, ஆனால் டைட்டிலின் முதல் எழுத்து வி என தொடங்கி கடைசி எழுத்து ம்-ல் முடிவதால் இது உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

அஜித்தும் சிவாவும் இணைந்திருந்த நான்கு படங்களின் டைட்டிலும் இதே பாணியில் தான் இருந்தது, தற்போது இந்த படத்தின் டைட்டிலும் இதே போல அடிபடுவதால் சிவா மாறவே மாட்டாரா? என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.