Siva Plan

Siva Plan : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதற்காக பல சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து அவர் நடித்து வருவதாகவும் நாம் கூறியிருந்தோம்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாம்.

மிஸ்டர் லோக்கல் விளம்பரத்திற்காக சில நாட்கள் இந்த படத்துக்கு பிரேக் விட்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது மீண்டும் இதன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கார்த்தியுடன் முதல்முறையாக இணையும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நடிகர் – யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படம் போக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கோகோ நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும் என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.