Karthi Movie

Karthi Movie Update : தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது.

மிஸ்டர் லோக்கல் தள்ளிபோக இந்த படம் தான் காரணமா? வெளிவந்த புதிய தகவல்!

இதை தொடர்ந்து ரெமோ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் அவரது ஜோடியாக இன்கேம் இன்கேம் புகழ் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கார்த்தியின் நண்பராக காமெடியில் கலக்க சதீஷ் ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நடிகரான இவர் கார்த்தியுடன் இணைவது இதுவே முதல் முறையாகும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.