பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் நடித்து வரும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஹீரோ ஹீரோயின்களுக்கு சமமாக பணத்தாசை பிடித்த மாமியாராக நடித்து வரும் விஜயாவும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியல் தான் மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. வெள்ளித்திரையில் இவர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆமாம் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.