
ஸ்ருதியுடன் ரவிக்கு திருமணம் நடக்க சீதாவுக்கு பளார் என அடி விழுந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரவி வீட்டில் ரெஸ்டாரண்ட் செல்வதாக பொய் சொல்லிவிட்டு மீனாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறார்.

இன்னொரு பக்கம் சீதா எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்து மாலை கட்டிக் கொண்டிருக்க ஸ்ருதி பிஜூயுடன் காரில் வந்து கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் முத்து காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பூனை வந்து சகுனம் சரியில்லை என்பதை காட்டுகிறது. அதன் பிறகு ஸ்ருதி பிஜூவை கிப்ட் வாங்க கடைக்கு அனுப்பி விட்டு சீதாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்குள் வந்து விடுகிறார்.

பிறகு ரவி மீனாவை நீங்க இங்கேயே இருங்க அண்ணி, ஸ்ருதியிடம் பேசிட்டு உங்களை உள்ள கூட்டிட்டு போறேன் என்று பொய் சொல்லி வெளிய விட்டுவிட்டு உள்ளே செல்கிறார். பிறகு ரவிக்கும் கல்யாணம் நடக்க மீனா வெளியே காத்திருக்க ரொம்ப நேரம் ஆகிய ரவி வரலையே என்று உள்ளே சென்று பார்க்க இருவரும் திருமண கோலத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இப்படி வீட்டை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது? மாமாவுக்கு தெரிஞ்சா அவர் எவ்வளவு வருத்தப்படுவாரு ரவியையும் ஸ்ருதியையும் பிடித்து திட்டுகிறார். இதுக்கெல்லாம் நீயும் உடைந்தியா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம எல்லாத்தையும் மறைச்சிட்ட என சீதாவை பளார் பளார் என அறைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.