குடும்பத்தை மீறி சாத்தியம் முடிவு பண்ற எடுக்க பிஏவால் ரோகிணிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா போன் போட்டு சத்யா வேலைக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கான் எவ்வளவு சொல்லியும் கேட்கல நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போ என்று சொல்ல மீனா வேலையை முடிச்சிட்டு வரேன் என போனில் வைக்கிறார்.
அடுத்ததாக விஜயா பசங்க ஏன் மேல போய் தூங்குனாங்க என்று தெரியாமல் குழம்பி போய் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்க அண்ணாமலைக்கு இப்ப எதுக்கு வீட்டை கூட்டிக்கிட்டு இருக்க என்று கேட்க இந்த வீட்டில ஏதோ நடக்குது இங்க என்னன்னு தெரியல என்று புலம்ப நீ தான் நடந்துகிட்டு இருக்க என்று அண்ணாமலை கவுண்டர் அடிக்கிறார்.
மூணு பேரும் எதுக்கு மேல போய் தூங்குனாங்க இவங்க மூணு பேரும் ஒன்னா சேர்ந்து சிரிச்சு பேசி இருக்காதீங்க ஏதோ தப்பா இருக்கு என்று சொல்ல அண்ணாமலை அவங்க பிரச்சனையை அவங்க பார்த்துப்பாங்க நீ அமைதியா இரு என்று கூறுகிறார்.
இந்த நேரம் பார்த்து ரவி வெளியே வந்து மீனாவிடம் காபி கேட்க அவரை கூப்பிடும் விஜயா உனக்கு ஸ்ருதிக்கும் என்னடா பிரச்சனை என்று கேட்க ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். பிறகு ஸ்ருதி வெளியே வந்து ஆன்ட்டி அவன் குளிக்க போறானா இல்ல நான் குளிக்க போகட்டுமா கேளுங்க என்று கேட்க ரவி எனக்கு டைம் ஆகுது, நான் குளிச்சிட்டு வரேன்மா என்று ரூமுக்குள் செல்ல பிறகு விஜயா ஸ்ருதியிடம் வந்து அவன் எதுக்கு மாடியில் இருந்து இறங்கி வந்தான் என்று கேட்க மாடி மேல ஏறினா இறங்கி தான் ஆகணும் ஆன்ட்டி என்று ஸ்ருதி பதில் கொடுக்க விஜயா ஐயோ நான் அதை கேட்கல உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா என்று கேட்க இதுவரைக்கும் இல்லை என்று சொல்லி ரூமுக்குள் செல்கிறார்.
இதனால் விஜயா உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து மீனா வீட்டுக்கு வந்து சத்யாவை வேலைக்கு போகாத என்று சொல்ல இந்த குடும்பத்தை நான் தான் பார்த்துக்கணும் நிறைய கடமை இருக்கு எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் என்று சொல்லி எல்லாருடைய பேச்சையும் மீறி வேலைக்கு கிளம்பி செல்கிறார்.
மறுபக்கம் வித்யாவிடம் ரோகிணி மனோஜ் வெயிட்டராக வேலை பார்த்த விஷயத்தை சொல்ல இனிமே அவருக்கு பிரஷர் கொடுக்காத, மனோஜ் அவருக்கு பிடித்த வேலையா தேடிக்கட்டும் என்று சொல்ல ரோகிணியும் சரி என்று கூறுகிறார். இந்த நேரம் பார்த்து பிஏ அங்கு வந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்க ஓனர் வந்து விடுகிறார். என்ன இது இங்க ஜென்ட்ஸ் எல்லாம் அனுமதி இல்லையே அப்படி இருக்கும்போது இவரை எதுக்கு உள்ள உக்கார வச்சு பேசிட்டு இருக்க? முதல்ல வெளியே அனுப்பு என்று சொல்ல ரோகிணி 2 நாள்ல பணத்தை கொடுக்கிறேன் என்று பிஏவை அனுப்பி வைக்கிறார். அதோடு நீங்க ஓனர் கிடையாது எம்ப்ளாயி தான் என்று ரோகிணியை திட்டுகிறார்.
அடுத்ததாக செட்டில் சவாரி இல்லாமல் செல்வம் முத்து என எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சத்யாவும் சிட்டியும் வர முத்து உன்னை தான் என் கண் எதிரே வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல, அப்படி இருக்கும்போது எதுக்கு வந்த என்று கேட்கிறார். சத்யா உன்கிட்ட பேசணும் என்று சொல்ல சத்தியா முத்துவை நோக்கி சென்று பணத்தை எடுத்து வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.