Sirakadikka Aasai Episode Update 30.05.23
Sirakadikka Aasai Episode Update 30.05.23

விஜயா கல்யாணத்துக்கு நாள் குறிக்க அண்ணாமலை மனோஜ்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா ரோகினிக்கு 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொடுத்திருக்கும் விஷயத்தை மனோஜிடம் சொல்ல அவர் ரோகினி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா நீ பயப்படாதே என சொல்கிறார்.

அவர் பண்ண போறது சூப்பர் பிசினஸ் ஈசியா பணத்தை திருப்பி எடுத்துடலாம் என சொல்கிறார். பிறகு முத்து மீனா பஸ்ஸில் சென்று கொண்டிருக்க வழியில் ரோகினியின் அம்மா பேர குழந்தையுடன் ஏறுகிறார்.

முத்து அவர்களை கூப்பிட்டு மீனா பக்கத்தில் உட்கார வைக்க அவர்களும் மீனாவுடன் பேசிக் கொண்டே வருகின்றனர். மீனா இவனோட அப்பா அம்மா எங்கே என கேட்க அந்த சின்ன பையன் எனக்கு தான் அப்பா அம்மாவே கிடையாதே, பாட்டி கூடத்தான் இருக்கேன் என சொல்ல மீனா கஷ்டப்படுகிறார்.

முத்து எனக்கு உங்கள பார்க்கும் போது என்னுடைய பாட்டி ஞாபகம் தான் வருது, என்னையும் அவங்க தான் வளர்த்தாங்க. எனக்கு அம்மானு சொன்னா என்னுடைய பாட்டி தான் முதல்ல வந்து நிப்பாங்க என பேசுகிறார். ஏன் உங்களுக்கு அம்மா இல்லையா என கேட்க இருக்கிறார்கள் ஆனால் இருந்தும் இல்லாத மாதிரி தான் என முத்து பதில் சொல்கிறார்.

மறுபக்கம் விஜயா, பார்வதி, அண்ணாமலை, மனோஜ் என எல்லோரும் கோவிலுக்கு தேதி குறிக்க வருகின்றனர். ஏற்கனவே ரோகிணி தன்னுடைய தோழியுடன் வந்து இங்கே காத்திருக்க பிறகு அண்ணாமலை மனோஜை அழைத்துச் சென்று உனக்கு உண்மையாகவே இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா திரும்பவும் பாதியில ஓடிப் போய்ட மாட்டியே என கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

எனக்கு முதல்ல பார்த்த பொண்ணு சுத்தமா செட்டாகாத பொண்ணு, ஆனா ரோகிணி அப்படி இல்ல எனக்கு எல்லா விதத்திலும் ஏத்த பொண்ணு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என சொல்ல அண்ணாமலை சரி போ என அனுப்பி வைக்கிறார்.

ஜோசியர் தேதி குறித்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் மனோஜ் ரோகிணியுடன் பேச ரோகிணி உங்கப்பா என்ன கேட்டாரு நீங்க பயந்து பயந்து பதில் சொன்னீங்க என கேட்க நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என பில்டப் கொடுக்க அப்போது யாரோ ஒருவர் தேங்காய் உடைக்க அந்த சத்தம் கேட்டு மனோஜ் ரோகிணி பின்னால் ஓடி ஒளிய அதைப் பார்த்து ரோகினியும் அவரது தோழியும் சிரிக்கின்றனர்.

பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் ரவி அண்ணியை பார்த்துட்டு வரேன் என சொல்லி மனோஜை வந்து தட்ட ரோகிணி அவனிடம் சண்டை போட பிறகு மனோஜ் அவன் என்னுடைய தம்பி என அறிமுகம் செய்து வைக்கிறார்.

பிறகு ரவி நீங்க மலேசியாவில் எங்க இருக்கீங்க உங்களுக்கு ரெஸ்டாரன்ட் இருக்குன்னு அம்மா சொன்னாங்க அதோட பேர் என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்க ரோகினி பதில் சொல்ல முடியாமல் தவிக்க அவரது தோழி ரவியை டைவர்ட் செய்து அவனுடன் பேசி பழகுகிறார். இதை பார்த்த விஜயா இவ எதுக்கு என் புள்ளையை தொட்டு தொட்டு பேசிகிட்டு இருக்கா என கோபப்படுகிறார்.

அதன் பிறகு ரவி ரோட்டில் தன்னுடைய நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்கூட்டியில் வரும் ஒரு பெண் பாட்டி ஒருவரை இடித்து கீழே தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட ரவி அந்த பெண்ணை சேஸ் செய்து தடுத்து நிறுத்துகிறார். அந்தப் பெண் தனது முகத்திரையை விலக்க அவளது அழகை பார்த்து வியக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.