
முத்துவின் நிலையை அவமானப்படுத்தி உள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ரோகினி முத்து வேலை இல்லாமல் இருக்கும் விஷத்தையும் மீனா பைனான்சியரை சந்தித்து கெஞ்சிய விஷயத்தையும் சொல்ல விஜயா இப்ப வேலை இல்லாம தான் இருக்கியா இருந்த வேலையும் போச்சா என நக்கலாக பேசுகிறார்.

அது மட்டுமல்லாமல் உன் பொண்டாட்டி தான் பொய் சொல்லிக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இருந்தா இப்போ நீயும் அவ கிட்ட இருந்து கத்துக்கிட்டியா? அடுத்த மாதம் எப்படி பணம் கொடுப்ப? வேலைக்கு போற ஐடியா இருக்கா இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்.
ரோகினி மனோஜ் வேலை இல்லாம இருந்தபோது என்னெல்லாம் பேசினீங்க இப்போ நாங்க தான் இந்த குடும்பத்துக்கு பணம் கொடுக்கிறோம் என்று பேச மீனா யாரும் எங்களுக்காக பணம் கொடுக்க வேண்டாம் என பதில் கொடுக்கிறார்.

மனோஜ் நீ பார்ல வேலைக்கு போ அதுதான் உனக்கு கரெக்ட்டா இருக்கும் என்று சொல்ல போதும் நிறுத்துங்க அவர் ஒன்றும் வேலை இல்லைன்னு சும்மா ஒக்காந்து சாப்பிடல அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியுமா என சொல்ல முத்து அதை தடுத்துவிட அண்ணாமலை மீனாவிடம் என்ன வேலை செய்கிறான் என்று கேட்க அப்பார்ட்மெண்டில் கார் துடைக்கும் வேலையை செய்கிறார் என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
என்னால அந்த காரும் போச்சா என்று அண்ணாமலை கேட்க முத்து அப்படி பேசாதப்பா அந்த கார் இல்லனா இன்னொருத்தன் கிட்ட வேலை செய்ய போறேன் அவ்வளவுதான் என்று அவருக்கு ஆறுதல் கூறுகிறார். உனக்கு எப்போ வேலைக்கு போனோம்னு தோணுதோ அப்போ உனக்கு பிடிச்ச வேலைக்கு போ, நீ யார் கிட்டயும் எதுக்காகவும் அசிங்கப்படணும்னு அவசியம் இல்ல என சொல்கிறார்.
பிறகு மீனாவிடம் ரூமுக்குள் வந்து முத்து சத்தம் போட நீங்கள் தான் அனுசரித்து போகணும். ஒன்னும் தப்பு கிடையாது, நீங்க அவர்கிட்ட போய் மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல முத்து அந்தாள் என்ன பேசினான் தெரியுமா என அண்ணாமலை பற்றி பேசியதை சொல்ல மீனா நீங்க பண்ணது சரிதான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டாம். இந்த விஷயம் எனக்கு தெரிந்து இருந்தால் நானே அவனை அடித்து இருப்பேன் என கூறுகிறார்.

இதைக் கேட்ட அண்ணாமலை செல்வத்தை அழைத்துக் கொண்டு சென்று முத்துவின் காரை வாங்கியவரை சந்தித்து காரை திருப்பி கேட்க அவர் இந்த காருக்கு நான் நிறைய செலவு பண்ணி இருக்கேன் என்று சொல்லி நான்கரை இலட்சம் ரூபாய் வந்துட்டு கார் எடுத்துக்கங்க என கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த அண்ணாமலை விஜயாவிடம் வீட்டு பத்திரத்தை கேட்க அவர் எனக்குனு இருக்கிறது இந்த ஒரு வீடு மட்டும் தான் என சொல்ல அண்ணாமலை முத்துவுக்காக விஜய் அவரிடம் கோபப்பட பிறகு அவர் அப்படின்னா 6 லட்சமா வாங்குங்க நானும் என்னுடைய நகை எல்லாம் அடகு வச்சிருக்கேன். அதையெல்லாம் மீட்கணும் என்று சொல்ல அண்ணாமலை சரி என்று சொல்லி பத்திரத்தை வாங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.