ரோகிணியால் விஜயாவுக்கு வந்த சிக்கல் ஒரு பக்கம் இருக்க மீனா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விஜயாவும் பார்வதியும் கந்துவட்டி காரனை சந்திக்க வர அவர் எங்க உங்க பசங்க, உங்க கணவரை கூட்டிட்டு வர சொன்னேனே அவங்க வரலையா வெளியில இருக்காங்களா கூப்பிடுங்க என்று சொல்ல விஜயா இல்ல அவங்க வரல அவங்க எல்லாரும் வெளியூருக்கு போய் இருக்காங்க என்று ஒரு கதையை சொல்கிறார்.

பார்வதியும் ஆமா அவங்க எல்லாம் வெளியூருக்கு போய் இருக்காங்க சொத்துல எந்த பிரச்சனையும் வராது என்று சொல்ல சரி இந்த மாசத்துக்கான வட்டியை கொடுங்க என்று வட்டிக்காரன் கேட்க விஜயா 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுக்க வட்டியே 85 ஆயிரம் ரூபாய் இதிலேயே கம்மியா கொடுத்தா எப்படி இருந்தாங்க உங்க பணத்தை எடுத்துட்டு போங்க இன்னும் மூணு நாள்ல 17 லட்சம் ரூபாயை வட்டியோடு கொடுத்துட்டு உங்க பத்திரத்தை வாங்கிட்டு போங்க என்று சொல்கிறார்.

விஜயா இந்த ஒரே முறை மட்டும் பொறுத்துக்கோங்க கல்யாணத்தால பணத்தை கொடுக்க முடியல என்று சொல்ல அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் கந்துவட்டிக்காரர். சரி வலளலயலை வச்சு பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று சொல்ல வளையலை கொடுங்க நாங்களும் வாங்கிப்போம் என்று சொல்லி வளையலை வாங்கி பணத்திற்காக கழித்துக் கொள்கிறார்.

விஜயா என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி வருத்தப்பட மீனாவை ராசி இல்லாதவனு சொன்னியே இப்ப ரோகிணி வந்த நேரம் உன் வளையல் போச்சு ஒருத்தர குறை சொல்றதால எதுவும் மாறாது எல்லாம் நம்ப நேரம் என்று சொல்கிறார் பார்வதி.

இன்னொரு பக்கம் முத்து ஸ்டேஷனுக்கு சென்று சுதாகர் மேல் புகார் கொடுக்க போக அவர்கள் ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர். இன்னொரு பக்கம் ரோகினி மனோஜ்க்கு ஒரு வேலை பார்த்து சொல்ல மனோஜ் என்னுடைய படிப்பு தகுதிக்கு இதெல்லாம் எப்படி செய்ய முடியும் என்று சொல்ல கொஞ்ச நாளைக்கு இந்த வேலையை பாரு என்று சம்மதிக்க வைக்கிறார்.

பிறகு மனோஜ் எனக்கு ஒரு டீ கிடைக்குமா என்று கேட்க வெளியே வரும் ரோகிணி மீனாவிடம் டீ போட்டு தர சொல்லி கேட்க எனக்கு வேலை இருக்கு நீங்களே போட்டுக்கங்க என்று சொல்லி உள்ளே சென்று விடுகிறார். இதைப் பார்த்த விஜயா நீ உள்ள போ ரோகினி உனக்கு டீ வரும் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு மீனாவிடம் ஒரு டீ போட்டு கொடுத்தா குறைஞ்சா போயிடுவ என்று சத்தம் போடுகிறார் விஜயா.

எனக்கு நிறைய வேலை இருக்கு ஒரு டீ போட்டுக்கறதுல என்ன இருக்கு என்று சொல்ல அவ டீ போடணுமா என்று விஜயா கேள்வி கேட்க சரி அப்போ நான் டீ போடுறேன், அவங்களை வந்து இந்த பாத்திரங்களை துலக்க சொல்லுங்க என்று கூறுகிறார். அவ பணக்கார வீட்டு பொண்ணு அவங்க வீட்ல இதெல்லாம் செய்வதற்கு பத்து ஆளுங்க இருப்பாங்க என்று சொல்ல அதுல ஒரு ஆளு வந்து செய்ய சொல்லுங்க என்று மீனா பதிலடி கொடுக்கிறார்.

மீனா கூட கூட பேச விஜயா நீ என்ன டீ போடுவது நானே போட்டுக்கிறேன் என்று டீ போடுகிறார். இன்னொரு பக்கம் முத்து ரவியுடன் வந்து சிசிடிவி ஃபுட்டேஜ் கேட்க சூப்பர் மார்க்கெட்டில் அது டெலிட் ஆகிவிட்டது என்று சொல்கின்றனர். மேலும் ரவி ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் என்ற உண்மையை உடைக்க முத்து கோபமாகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.