கந்து வட்டி காரனிடம் வசமாக சிக்கியுள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ், ரோகினி, விஜயா ஆகியோர் கோவிலுக்கு வர பார்வதி ரோகினிக்கு வாழ்த்து சொல்கிறார்.

அதை தொடர்ந்து வீட்டுக்கு வரும் முத்து மீனாவை கூட்டிக்கொண்டு கந்து வட்டி காரனிடம் பணத்தை கொடுக்க வருகிறார். இன்னைக்கு ஒருநாள் தான் அந்த ஆளு சாந்தமா இருப்பாரு, பணம் கொஞ்சம் கம்மியா இருக்கு.. முத்துவோட பொண்டாட்டினு பணத்தை கொடுத்துட்டு வந்துடு என சொல்லி அழைத்து வருகிறார்.

மறுபக்கம் எல்லோரும் அந்த கந்து வட்டி காரனிடம் பணத்தை கொடுத்து காலை தொட்டு கும்பிட்டு கொண்டே செல்ல பார்வதி ஏதோ சாமியார் போல வா நாமளும் போய் ஆசிர்வாதம் வாங்கலாம் என்று சொல்லி போக விஜயா அது வட்டிக்காரன் என தெரிந்ததும் தெறித்து ஓட அவர் பார்வதியை பிடித்து பணம் கேட்க வீட்டுக்கு தெரியாது பணம் வாங்கி இருக்கா, அதான் பயந்து ஓடிட்டா என்று சொல்ல நாளைக்கே அவங்க வீட்ல இருந்து எல்லாம் வந்து கையெழுத்து போடணும், இல்ல உங்க வீட்டையும் சேர்த்து எழுதிப்பேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் பார்வதி விஜயாவிடம் என் வீடும் போச்சா, நடுத்தெருவுல நிக்க போறேன் என புலம்ப அந்த நேரம் பார்த்து அண்ணாமலை வந்து விட விஜயா எதையோ சொல்லி சமாளிக்கிறார்.

பிறகு கோவிலுக்கு வந்த முத்து மீனாவை அனுப்பி பணத்தை கொடுக்க சொல்லி அனுப்பிவிட்டு மறைந்து இருந்து பார்க்க வட்டிக்காரன் முத்துவை பார்த்து அழைத்து மீதி பணம் எப்போ கிடைக்கும் என கேள்வி கேட்டு கொண்டிருக்க இதை பார்த்த விஜயா அந்த ஆளு முத்து கிட்ட எதையாவது சொல்ல போறான், வீட்டை நாலாக்கிடுவான் என அதிர்ச்சி அடைகிறார்.

தொடர்ந்து பார்வதி வட்டி காரன் கொடுத்த வார்னிங்கால் பயத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.