ஸ்ருதியிடம் வாக்குவாதம் செய்த ரோகினி, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
ஸ்ருதியிடம் வாக்குவாதம் ரோகிணி செய்ய விஜயா ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா ரோகிணிக்கு போன் போட்டு நீங்க கடை ஆரம்பிச்சது உங்க மாமனாரோட பணத்துல தானமே உங்க அப்பா மலேசியாவில் இருந்து அனுப்பினாங்கன்னு சொன்ன நானும் மலேசியா பணம் நினைச்சா இப்படி பண்ணி இருக்கீங்க என்று சொல்ல உடனே டென்ஷன் ஆன ரோகினி உங்களுக்கு என்ன பிரச்சனை நீங்க எதுக்கு எங்க வீட்டு பிரச்சனையில் தலையிடறீங்க என்று போனை கோபமாக பேசிவிட்டு வைத்து விடுகிறார். உடனே மீண்டும் போன் வர டென்ஷனான ரோகிணி போனை எடுத்து யார் என்றும் பார்க்காமல் ஆமாங்க நான் தான் ஏமாத்துனேன் நான் ஒரு பிராடு அது எங்க அப்பா பணம் இல்ல தான் இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு என்று கேட்க பார்த்தால் அது ரோகிணியின் அம்மா. ஏண்டி இப்படி எல்லாம் பேசுற என்று கேள்வி கேட்கிறார்.
எல்லா பிரச்சினையும் சரியாயிடும்னு சொன்னா எதுவுமே சரியாகவில்லை என்று ரோகினி சொல்ல தப்பு உன் மேல இருக்கிறதுனால கொஞ்ச நாள் ஆகும் அதுக்குள்ள வீட்டுக்கு வந்துறாத என்று சொல்ல உனக்கு எப்போ நான் பாரமா வந்து இருக்க மாட்டேன் என்று சொல்ல, நான் அதுக்காக சொல்லல டி என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே ரோகினி போனை வைத்து விடுகிறார் உடனே விஜயா கதவைத் தட்ட ரோகினி வெளியே வருகிறார்.
அந்த நேரம் பார்த்து மனோஜ் வர நீ கடைக்கு போகலையா என்று அனுப்பிவிட்டு ரோகினி இடம் உனக்கு யார்கிட்டயும் மரியாதையாக பேச தெரியாதா என்று திட்டுகிறார் என்னாச்சு ஆன்ட்டி என்று கேட்க எப்பவுமே செய்வதெல்லாம் செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறதே ஒரு வேலையா வெச்சுகிட்டு இருக்கியா என்று கேட்கிறார். ஸ்ருதி அம்மா கிட்ட எதுக்கு மரியாதை இல்லாம பேசின என்று கேட்க அவங்க தான் தேவையில்லாம என்ன கேள்வி கேட்டுகிட்டே இருந்தாங்க நம்ம குடும்ப விஷயத்துல ஏன் தலையிடுறாங்கன்னு கேட்டேன் என்று சொல்ல நம்ம குடும்ப விஷயமா அவங்களும் நம்ம குடும்பம் தான் என்று சொல்லுகிறார். பிறகு ரோகிணியை திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீனாவிடம் இங்கே என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க போய் சுடுதண்ணி எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பிவிட்டு ரூமுக்கு சென்று விட ரோகிணியும் ரூமுக்குள் சென்று விடுகிறார்.
உடனே ஸ்ருதி பிரிட்ஜில் இருக்கும் தண்ணீர் குடிக்க வர மீனா ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க கோல்டாகும் என்று சொல்ல பரவால்ல அதெல்லாம் ஒன்னும் ஆகாது என்று சொல்லுகிறார்.நான் உங்களுக்கு சீரகத் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொன்னவுடன் ரோகிணி ஸ்ருதியின் குரலைக் கேட்டு வெளியில் வந்து எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் என்ன பண்ற என்று கேட்க நீங்க பேசுனது உங்களுக்கே தெரியாதா? என்று கேட்க எதுக்கு உங்க அம்மாகிட்ட எங்களோட பர்சனல் விஷயத்தை சொன்னீங்க என்று கேட்கிறார். உங்க ரூமுக்குள்ள நடந்த விஷயத்தை நான் சொல்லல ஹால்ல எல்லாரும் முன்னாடியும் நடந்த குடும்ப பிரச்சனை தான் சொன்னேன் என்று ஸ்ருதி சொல்லுகிறார்.
நான் உங்க பிரச்சினையில ஏதாவது தலையிடறனா நீங்க மட்டும் எதுக்கு என்னோட பிரச்சனையில தலையிடுறீங்க என்று கேட்கிறார். நான் ஒன்னும் நடக்காதது சொல்லல, நீங்க தப்பு பண்ணீங்க தானே கேட்டாங்க என்று ஸ்ருதி கோபப்படுகிறார். உடனே மீனா சமாதானப்படுத்த ரோகிணி மீனாவிடம் நீங்களும் உங்க வீட்ல சொல்லி இருக்கீங்களா? அவங்களும் எனக்கு போன் பண்ணுவாங்களா? என்று கேட்க அவங்களாம் பண்ண மாட்டாங்க நீங்க ஒன்னும் அத பத்தி கவலைப்படாதீங்க என்று சொல்லி இருவரையும் சமாதானப்படுத்த ரோகினி ஒரு கட்டத்திற்கு மேல் இதுக்கு மேல என் விஷயத்துல தலையிடாதீங்க அவ்வளவுதான் என்று கோபப்பட்டு சென்று விடுகிறார்.மீண்டும் சுருதி கோபமாக போக மீனா அவரை சமாதானப்படுத்துகிறார்.
ரூமுக்குள்ள இருந்த ரோகினி மனோஜ்க்கு போன் போட மனோஜ் போனை எடுக்காமல் இருக்கிறார். உடனே அம்மா கிட்ட கேட்டு போன் எடுக்கலாமா வேணாமா என்று கேட்கலாம் என முடிவு செய்து, விஜயாவிற்கு போன் போடா ரோகினி போன் போட்டா என்று சொல்ல எடுத்துப் பேசுனியா என்று கேட்கிறார் இல்லம்மா நீ சொன்னா பேசலாம்னு இருக்கேன் என்று கேட்க உடனே விஜயா இன்னைக்கு நைட்டு நீ வீட்டுக்கு வர வேண்டாம் அங்கேயே தங்கிடு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கோ வேலை இருக்குன்னு சொல்லு என்று சொல்லுகிறார் நான் போன் பண்ணா எடுக்கறதா வேண்டாமா என கேட்க போனை எடுத்து வரமாட்டேன்னு சொல்லு என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே ரோகிணியின் போனை எடுத்த மனோஜ் இன்னைக்கு நான் வீட்டுக்கு வரமாட்டேன் எனக்கு வேலை இருக்கு என்று சொல்ல எப்பவுமே அந்த வேலையை கடையில் இருக்கிறவங்க தானே செய்வாங்க என்று சொல்ல இப்பெல்லாம் யாரையும் எதுக்காகவும் நம்ப முடியல என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி ஆகிறார். உடனே விஜயா வெளியே வர ரோகிணியும் வெளியில் வருகிறார் மீனாவை கூப்பிட்டு டிபன் செஞ்சிட்டியா என்று கேட்க செஞ்சிட்ட அத்தை என்று சொல்லுகிறார். அதற்கு விஜயா மனோஜ்க்கு மட்டும் செய்ய வேண்டாம் ஆனா இன்னைக்கு வரமாட்டான் என்று சொல்ல, ரோகினி பார்த்து அப்போ எனக்கு முன்னாடி இவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குனா அப்போ இவங்க சொல்லித்தான் மனோஜ் இன்னைக்கு வீட்டுக்கு வரல என்று முடிவெடுக்கிறார்.
உடனே முத்து வர மீனா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.