மனோஜை ரவுண்டு கட்டிய குடும்பத்தினர், விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மனோஜை ரவுண்டு கட்டி கேள்வி கேட்டுள்ளனர் குடும்பத்தினர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜை ரவுண்டு கட்டி குடும்பத்தினர் நீ காசு கொடுக்காதது கூட பிரச்சனை இல்லை சந்தோஷி சார் காசு கொடுத்ததை ஏன் சொல்லல என்று கேட்க முடிஞ்சதுக்கு அப்புறம் குடுக்கலாம் இருந்தேன் என்று ஒரே வார்த்தையை சொல்லிக் கொண்டே இருக்கிறார். உடனே மீனா ரோகினிடம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்க மனோஜ் சொல்வது போல் அவரும் சொல்ல சுருதி மனோஜ் டப்பிங் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான ரவி மனோஜ் அடிக்கப் போக அண்ணாமலை தடுத்து நிறுத்தி ரோகினி மற்றும் மனோஜை உட்கார வைத்து சந்தோஷி சார் போன் பண்ணாரா?பேசினாரா? என்று பொறுமையாக ஒவ்வொன்றாக கேட்க எல்லாத்துக்கும் பதில் சொல்லும் மனோஜ் பணத்தை கொடுக்க சொன்னதை ஏன் சொல்லல என்று கேட்க வரும் போது முடிஞ்சதுக்கு அப்புறம் குடுக்கலாம்னு இருந்தேன் என்று மீண்டும் சொல்ல அண்ணாமலை கோபமடைந்து மனோஜ் துரத்தி அடிக்க வருகிறார். அவரை முத்து மற்றும் ரவி தடுத்து நிறுத்துகின்றனர். உடனே முத்து அவன் சொல்ல மாட்டான்பா விடுங்க பணத்த குடுக்க சொல்லுங்க என்று சொல்ல ரோகினி மனோஜ் ஃபோனை எடுத்து இருவருக்கும் பணத்தை அனுப்பி விடுகிறார்.
பிறகு அப்பா அம்மாக்கு அனுப்பு என்று சொல்ல அண்ணாமலைக்கு அனுப்பி விடுகிறார் அம்மாவுக்கு போடு என்று ரவி சொல்ல அம்மாவுக்கு 15,000 தான் போடுவேன் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலை நீ கம்மியா எல்லாம் வாங்காத விஜயா என்று சொல்ல ரவி அம்மாக்கு கம்மியா கொடுத்து ஏமாத்த பாக்குறியா இப்பவே அனுப்புடா என்று சொல்லுகிறார். உடனே நேத்து அம்மாக்கு பத்தாயிரம் கொடுத்துட்டேன் என்று சொல்ல அண்ணாமலை எழுந்து வந்து விஜயாவிடம் நேத்து மனோஜ் பத்தாயிரம் கொடுத்ததை ஏன் சொல்லல என்று கேட்க விஜயாவும் முடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு இருந்த என்று ஆரம்பிக்க அண்ணாமலை யார் ஏதோ சொல்ல வேணாம் என்று கத்திவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் முத்து கார் பைனான்ஸ் கட்ட போக ஆனால் ஏற்கனவே கட்டிவிட்டதாக சொல்லுகின்றனர். யார் கட்டினது என்று கேட்க மீனா என்று பெயரை சொல்லுகின்றனர். உடனே மீனா அங்கு வர நீ எதுக்கு மீனா கட்டின என்று முத்து கேட்கிறார். ஏன்னா கட்டக்கூடாதா? என்று கேட்க உங்ககிட்ட ஏது காசு என்று கேட்கிறார் அதுதான் நடிச்சதுக்கு குடுத்தாரு அதுதான் என்று சொல்ல அது உன்னோட செலவுக்கு வச்சுக்கலாம் அல்ல என்று சொல்லுகிறார். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல விடுங்க என்று பேசிவிட்டு வெளியே வர அண்ணாமலை செல்வத்துடன் வருகிறார். நீ எங்கப்பா இங்க என்று முத்து கேட்க உன்னோட காருக்கு பைனான்ஸ் கட்டலான்னு வந்தேன் என்று சொல்லுகிறார். நீ ஏம்பா கொடுக்கப் போற என்று கேட்காது தான் மனோஜ் காசு கொடுத்தால்ல அந்த காசு இருக்கு நான் என்ன பண்ண போறேன் நீயும் எவ்வளவு நாளைக்கு கஷ்டப்படுவ நீயும் முன்னேறி வரணும் என்று சொல்லுகிறார். முத்து உன்னோட கை செலவுக்கு வச்சுக்கோப்பா என்று சொல்ல எனக்கு தான் ஃபியூஷன் வருது நீ தர போதும் என்று சொல்லுகிறார்.
இந்த மாசம் கட்டியாச்சு மாமா என்று சொல்ல சரி அடுத்த மாசம் நான் தான் கட்டுவேன் என்று சொல்லுகிறார். பிறகு சரி வாங்க போகலாம் முத்து அனைவரையும் கூப்பிட நீங்க போங்க நானும் பார்வதி ஆன்ட்டி வீட்டில் பூ கொடுத்துட்டு வரங்க என்று சொல்லுகிறார். பார்வதி மீனாவிற்காக காத்துக் கொண்டிருக்க மீனா பூ எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார் விஜயா இவகிட்ட எதுக்கு பூ வாங்குற வேற ஆளே இல்லையா என்று சொல்ல மீனா கிட்ட தான் எப்போ வாங்குவ பிரெஷா இருக்கும் என்று சொல்லுகிறார். மீனாவிடம் நீயே போய் படத்துக்கலாம் போற்றுமா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மீனா நான் கிளம்புறேன் என்று சொல்ல மழை வர மாதிரி இருக்கு மேல துணி இருக்குமா என்று சொல்ல நான் போய் எடுத்துட்டு வர அனுப்பிய என்று சொல்லுகிறார் பரவால்லம்மா நான் எடுத்துக்கிறேன் என்று சொன்னா நீங்க தான் படிக்கட்டு ஏற சிரமப்படுவீர்கள் என்று சொல்ல, விடு அவளை எடுத்துட்டு வரட்டும் என்று விஜயா சொல்லிவிட்டு அப்படியே எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டோம் வா என்று சொல்லுகிறார் சரி என்று சொல்லிவிட்டு மீனா மேலே செல்ல ரதியின் அம்மா வருகிறார். அவர் புடவை வியாபாரம் செய்வதால் புடவையை விஜயாவிடம் காட்டுகிறார்.
பணம் எடுக்கப் போக பணம் காணாமல் போய் இருப்பதை பார்த்து பார்வதி அதிர்ச்சி அடைகிறார். விஜயாவிடம் சொல்ல விஜய் என்ன செய்யப் போகிறார் அதற்கு பார்வதியின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்துகொள்வோம்.