ஏமாறப்போகும் மனோஜ்.. மீனா சொன்ன வார்த்தை.. வருத்தத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
மீனா சொன்ன வார்த்தையால் முத்து வருத்தத்தில் உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வீட்டை சுத்தி பார்க்க பீச் பக்கத்தில் இருப்பதால் அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர் பிறகு பீச்சுக்கும் சென்று பார்த்துவிட்டு ரோகிணி மனோஜை கட்டிப்பிடித்து எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு மனோஜ் சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி இருக்கு என்றெல்லாம் பேசுகிறார்.
பிறகு வாங்கறத பத்தி பேசலாம் என்று முடிவெடுத்து உட்கார்ந்து பேசுகின்றனர். அப்போது வீட்டு ஓனர் இப்பத்திக்கு நீங்க அம்பது லட்சம் கொடுங்க அப்புறம் ஆறு மாசம் கழிச்சு கூட குடுங்க என்று சொல்ல அம்பது லட்சம் அதிகமா இருக்கு 30 லட்சம் தரேன் என்று மனோஜ் சொல்ல நாங்களும் கஷ்டப்பட்ட பேமிலி தான் என்று சொல்லி அவர்களும் ஒத்துக்கொள்கின்றனர். பிறகு மனோஜ் சந்தோஷத்தில் நண்பரை கட்டிப்பிடித்து கொண்டாட அவர் எனக்கு கொடுக்க வேண்டிய ரெண்டு பெர்ஸன்ட் கமிஷன் கொடுக்காமல் விட்ற போற ப்ரோ என்று சொல்லுகிறார். அது எப்படி கொடுக்காம இருப்ப வாங்க என்று மூவரும் காரில் சென்று விடுகின்றனர். உடனே வீட்டு ஓனராக இருந்த இருவரும் கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டு நம்ப நினைச்ச மாதிரி நம்ம சொன்னது எல்லாம் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டுக்குறான் இவன்கிட்ட இருந்து 30 லட்சத்தை வாங்கிட்டு நம்ம கிளம்பிட வேண்டியதுதான் என்று சந்தோஷப்படுகின்றனர். இதனால் மனோஜ் பெரிய சிக்கலில் மாட்டப் போகிறார் என்பது தெரிய வருகிறது.
மறுபக்கம் மீனா ஆர்டர் முடித்துவிட்டு காசு வாங்க மண்டபத்திற்கு போக 7 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர் பிறகு சூப்பராக டெக்ரேசன் இருந்தது இனிமேல் உனக்கே ஆர்டர் தருவாங்கன்னு நினைக்கிறேன். ஏற்கனவே ஒரு அம்மா பண்ணிக்கிட்டு இருந்தாங்க ஆனா இப்ப அவங்களுக்கு கொடுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன் அந்த சிந்தாமணி அம்மா வேற ஒரு வில்லங்கம் புடிச்ச ஆளு என்று சொல்லி மீனாவிற்கு ஒரு வில்லியை காட்டுகின்றனர். காசு வாங்கிக் கொண்டு மீனா வெளியே வர சிந்தாமணி உள்ளே செல்லுகிறார். மேனேஜர் அவரை உள்ளே வரவைத்து பேசுகிறார். என்ன கண்ணு ஆர்டர் எல்லாம் நம்மளுக்கு குடுத்துட்டு இருந்தா ஆனா இப்ப புதுசா ஒருத்தர் கொடுத்திருக்க என்ன விஷயம் என்று கேட்க நான் என்ன பண்ண முடியும் ஓனர் சொல்லிட்டாரு அதுதான் என்னால எதுவும் செய்ய முடியல என்று சொல்ல அவர் கையில் மீண்டும் அட்வான்ஸ் கொடுத்து இதற்கு அப்புறம் வர ஆர்டர் எனக்கு தான் கொடுக்கணும் ஓனர் சொன்னா நீ தான் பேசி புரிய வைக்கணும் என்று சொல்லிவிட்டு கார் பக்கத்தில் வந்து நின்று அந்த வண்டியில் என்ன பெயர் இருந்தது என்று கேட்க மீனா என்று சொல்லுகிறார் உடனே வில்லத்தனமாக யோசித்து விட்டு காரில் ஏறி சென்று விடுகிறார்.
வீட்டுக்கு வந்த மீனா ஸ்வீட்டுடன் வந்து அண்ணாமலைக்கு ஸ்வீட் கொடுக்கிறார். என்ன விஷயமா அடிக்கடிக்கு ஸ்வீட் கொடுக்க என்று கேட்க ஆர்டர் ஒன்னு எடுத்திருந்த இல்ல மாமா நல்லபடியா முடிச்சிட்ட நல்ல பேர் கிடைச்சிருக்கு என்று சொல்லி ஸ்வீட் கொடுக்க இதே மாதிரி நிறைய ஆர்டர் எடுக்கணும் என்று சொல்லுகிறார் உடனே விஜயா வழக்கம் போல் மீனாவை மதிக்காமல் பேசி விடுகிறார். அண்ணாமலை விஜயாவின் வாயில் ஸ்வீட்டை அடைத்து விட்டு கொஞ்ச நேரத்துக்கு பேசாம இரு என்று சொல்லுகிறார் உடனே விஜயா நான் இப்ப என்ன பேசக்கூடாது அவ்வளவுதான் என்று சொல்லி உள்ளே செல்கிறார். முத்து வந்தவுடன் மீனா விஷயத்தை சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார். இன்னைக்கு 7000 சம்பாதிச்சிருக்கேன் இதே மாதிரி ரெண்டு மூணு ஆர்டர் கிடைச்சா நம்ம ஈஸியா வீடு கட்டிடலாம் கடன் எல்லாம் அடைச்சிடலாம் என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க உடனே மீனா அதுவே இல்லாம இன்னைக்கு நான் உங்கள விட அதிகமா சம்பாதிச்சுருக்கேன் என்று சொன்ன முத்துவின் முகம் மாறுகிறது.
மீனாவின் வார்த்தையால் முத்துவின் மனம் காயப்பட என்ன செய்யப் போகிறார்? முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.