ரோகினியை மிரட்டிய பிஏ, அருண்,சீதா கல்யாணத்தை பேசி முடித்த அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினியை வந்து பிஏ நேரில் மிரட்ட, அண்ணாமலை சீதா,அருண் கல்யாணத்தை பேசி முடித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு சம்மதித்ததால் அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.பிறகு குடும்பத்தினர் அனைவரும் இப்பதான் நீ நல்ல முடிவு எடுத்திருக்க என்று சொல்லி பேச, விஜயா இவன் இன்னும் கொஞ்சம் லேட்டா சொல்லி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டு இருப்பாங்க என்று சொல்ல முத்து அதெல்லாம் உங்க ஓடுகாலி பையன் பண்ற வேலை சீதா அப்படி பண்ண மாட்டா என்று சொல்ல மீனாவின் முகம் மாறுகிறது. பிறகு நீங்களும் நாளைக்கு வருவீங்களா என்று மீனா கேட்க அருணை எனக்கு புடிக்கலனாலும் உங்க எல்லாருக்கும் புடிச்சிருக்கு அதனால வந்து தானே ஆகணும் வரேன் என்று சொல்ல அண்ணாமலையை கூப்பிடுகின்றனர் நான் இல்லாம எப்படி என்று சொல்ல மீனா விஜயாவை கூப்பிட விஜயா என்னால வர முடியாது என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் ரோகிணி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் போன் போட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ஷோரூம் வந்து விடுவேன் என சொல்லுகிறார் உடனே முருகன் ரோகிணியை வந்து சந்திக்க அவர் ஒரு லட்சம் பணத்தை எடுத்து முருகனிடம் கொடுக்கிறார் ரொம்ப தேங்க்ஸ் முருகன் என்று சொல்லிவிட்டு வித்யா கிட்டயும் தேங்க்ஸ் சொன்னதா சொல்லிடுங்க என்று சொல்லுகிறார் உங்க பிரண்டு தானே நீங்களே சொல்லுங்க என்று சொல்ல இல்ல முருகன் கஷ்டமான சூழ்நிலை வரும்போது தான் எல்லாரோட உண்மை முகமும் தெரிகிறது அவை என்ன லூஸ் பண்ணிட்டா ஆனா நான் இங்க வந்த போது எனக்கு நிறைய உதவி பண்ணிருக்கேன் நானும் பண்ணி இருக்கேன் இருந்தாலும் உங்க கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் என்று சொல்ல முருகன் சென்று விடுகிறார். உடனே பிஏ வந்து நிற்க ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.
நீ எதுக்கு இப்ப இங்க வந்த என்று கேட்க நீ ரொம்ப பெரிய ஆளு தான் கல்யாணி என்ன கொலை பண்ணுறதுக்கு ஆல் ரெடி பண்றியா உன்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா கேட்டு போர் அடிக்குது லைஃப் டைம் செட்டில்மெண்டா பத்து லட்சம் கொடுத்துடு என்று சொல்ல என்கிட்ட அவ்வளவு பணம் எல்லாம் கிடையாது என்று சொல்லுகிறார். அப்ப நான் இந்த உண்மைய நான் வீட்ல சொல்லிடுவேன் என்று சொல்ல மனோஜ்கிட்டயா என்று கேட்க இல்ல முத்து கிட்ட சொல்லிடுவேன் அவன் தான் சின்ன பிரச்சனையை ஊதி பெருசா இருக்குமா என்று போனை எடுக்க ரோகினி பதறி அடித்துக் கொண்டு நீ இப்போதைக்கு போனா உனக்கு அப்புறம் போன் பண்றேன்னு என சொல்லுகிறார் போன் பண்ணா உனக்கு நல்லது இல்லன்னா நான் முத்துக்கு ஃபோன் பண்ணுவேன் என்று மிரட்டிவிட்டு செல்கிறார்.
மறுநாள் காலையில் சீதாவை பெண் பார்க்க அருண் மற்றும் அவரது அம்மா அண்ணாமலை முத்து மீனா என அனைவரும் இருக்கின்றனர். சீதா அனைவருக்கும் காபி கொடுக்க கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை பற்றி குடும்பத்தினர் அனைவரும் பெருமையாக பேச இங்கே நம்பர் கல்யாணம் பேசி முடிக்க வந்திருக்கோம் என்ன பத்தி பெருமையா பேச வரலை என்று சொல்லிவிட்டேன் எங்களால 10 சவரன் நகை மாப்பிள்ளைக்கு மூணு சவரன் என இதுதான் போடமுடியும் கல்யாண வேலையை பார்த்துக்கிறோம் என்று சொல்லிவிட்டு நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க என்று அண்ணாமலை கேட்கிறார் அதற்கு அருண் அம்மா சீதா எங்க வீட்டுக்கு வரப்போற மகாலட்சுமி அது தவிர எங்களுக்கு வேற என்ன வேணும் என்று சொல்ல குடும்பத்தினை சந்தோஷப்படுகின்றன. அருண் இடம் கேட்க எனக்கு சீதா தவிர வேற எதுவும் வேண்டாம் என்று சொல்லுகிறார் ஆனால் எனக்கு ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு கல்யாணத்துக்கு அதிகாரிகள் எல்லாம் வருவாங்க அங்க குடிச்சிட்டு யாரும் சண்டை போடக்கூடாது என்று சொல்ல முத்துவின் முகம் மாறுகிறது உடனே முத்து ஒரு நல்ல விஷயம் தான் நாலு பேரு அது மாதிரி வரதா செய்வாங்க அதெல்லாம் ஒரு பிரச்சனையா பாத்துட்டு இருக்க முடியுமா என்று கேட்கிறார்.
அப்படி இல்லன்னா இவர்தான் அதுல செக் பண்றது இல்ல கில்லி ஆச்சே வாயில வச்சு ஊதிட்டு தான் உள்ள விடணும் என்று சொல்ல பிறகு அருளின் அம்மா நீங்க சொல்லுங்க சரிதான் எல்லாரையும் எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது இருந்தாலும் பிரச்சனை வராமல் தடுக்க முடிந்தால் நல்லது தான் என சொல்ல ஒரு வழியாக பேசி முடிக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது? முத்து என்ன சொல்லுகிறார்? அண்ணாமலையின் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
