நிதீஷ் பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் சொன்ன கோபி, அதிர்ச்சியில் மயங்கிய ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
நிதீஷ் பற்றிய உண்மை குடும்பத்தினருக்கு தெரியவரை ஈஸ்வரி மயக்கமாகி விழுந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சுதாகர் வீட்டுக்கு சென்று விசாரிக்க அங்கு சுதாகர் நிதிஷ்க்கு எந்த பழக்கமும் இல்லை அவங்க பிரண்டு எல்லாம் பண்ணி ஏதோ தப்பா குடிச்சிட்டு போயிருக்காங்க நீங்க எதுவும் கவலைப்படாதீங்க சாந்தரம் நித்திஷ் வீட்டுக்கு வந்துருவா என்று சொல்லுகிறார். உங்க மருமகனை நீங்க நம்புறீங்க இல்ல என்று சொல்ல பாக்யாவும் தலையாட்டி விட்டு இனியாவுக்கு இந்த விஷயம் தெரியாது அதுக்குள்ள கூட்டிட்டு வந்துருங்க அவர் நியூஸ்ல இருக்கா என்று சொல்ல இனிய விடம் சொல்ல வேண்டாம் நான் பாத்துக்குறேன் என சொல்லி அனுப்புகிறார்.
மறுபக்கம் கோபி இனியா வேலை பார்க்கும் இடத்திலிருந்து வெளியில் வர கோபி இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் டாடி என்று சொல்லுகிறார்.அப்ப நான் நீ வேலைய முடிச்சுட்டு வா நம்ம போயிடலாம் என்று சொல்ல இனியா சரி என சொல்லி வர பார்க்க அதற்குள் இனியாவின் தோழி வீட்டுக்கு கிளம்புகிறார் கிளம்பிட்டியா என்று சொல்ல ஆமாம் என சொன்னவுடன் அன்னைக்கு நம்ம ஊரு கேஸ் பத்தி பேசிட்டு இருந்தோம் இல்ல சுதாகரோட பையன் ட்ரக்ஸ் கேஸ் அந்த பையனை இன்னைக்கு திருப்பவும் அட்ரஸ் பண்ணி இருக்காங்க என்று சொல்ல இனியா கோபி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்தப் பெண் சென்றவுடன் கோபி கார் மீது குத்தி கோபத்தை வெளிப்படுத்துகிறார். இனியா கண்கலங்கி நிற்க அதற்கு தான் நான் உன்னை அப்பவே வீட்டுக்கு போயிடலாம்னு சொன்னேன் நீ தான் வரமாட்டேன்னு சொன்னேன் என்று சொல்ல ஒருவேளை நித்திஷ் என்னால தான் இப்படி ஆயிட்டாருன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்தது டாடி அதனாலதான் நான் அப்படி சொன்னேன் எனக்கு சொல்லுகிறார்.
அதனால தான் பேசப்போன அப்போ தள்ளிவிட்ட விஷயத்தையும் வாய் தவறி சொல்லிவிட கோபி டென்ஷன் ஆகி நீ இதுக்கு மேல அந்த வீட்டுக்கு போக தேவையில்லை என்று சொல்லி அழைத்துச் சென்று விடுகிறார். வீட்டில் பாக்கியா என்ன செய்வது என புரியாமல் உட்கார்ந்து இருக்க ஈஸ்வரி வந்து கேட்கும் பதில் எதுவும் சொல்லாததால் ஈஸ்வரி ஹாலில் சென்று டிவியை போடுகிறார் உடனே பாக்யா ஓடி வந்து டிவி எல்லாம் பார்க்காதீங்க போய் ரெஸ்ட் எடுங்க என்று சொல்ல இனியாவும்,கோபியும் வருகின்றனர். ஈஸ்வரி இவளை எதுக்கு கூட்டிட்டு வந்த என்று கேட்க இது இனியாவோட வீடு இனியா வரதுக்கு உரிமை இல்லையா என்று கோபி கேட்கிறார்.யார் இல்லை என்று சொன்னது அவ அவ புருஷனோட வரட்டும் எவ்வளவு நாள் வேணா இருக்கட்டும் என்று சொல்ல அது மட்டும் இல்லாம அவங்க வீட்ல போன் பண்ணி சொன்னியா, போன் பண்ணி சொல்லிடு என்று சொல்ல கோபி அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை, இனியா யாருக்கும் எதையும் சொல்ல வேண்டாம் என சொல்லுகிறார். இனியா எங்கேயும் போக மாட்டா இங்கதான் இருப்பா என்று சொல்லிவிடுகிறார்.
என்ன விஷயம் என்று ஈஸ்வரி கேட்க இனியா கண்கலங்கி நிற்கிறார் உடனே பாக்கியா மீது சாய்ந்து அழ நிதிஷ் என்று ஆரம்பிக்க இனியா எனக்கு எல்லாமே தெரியுமா என்று சொல்லுகிறார் உடனே கோபி நிதிஷ் பற்றிய உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு இனியாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
