மனோஜ் கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் முத்து, ரவி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.
மனோஜ் சொன்ன வார்த்தையால்,முத்துவும், ரவியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவும் அம்மாவும் பூக்கட்டிக் கொண்டிருக்க சீதாவின் அம்மா லீவெல்லாம் சொல்லிவை என்று சொல்லுகின்றார். எதுக்கு சொல்லணும் என்று கேட்க கல்யாணத்துக்கு கிட்ட லீவு போடுற மாதிரி இருக்கும் என்று சொல்ல எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். அந்த நேரம் பார்த்து மீனா வர மீனாவின் அம்மா காபி கொண்டு வரேன் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். சீதாவிடம் மீனா பார்த்தா நல்லவரு மாதிரி தான் தெரியுது உன் கிட்ட பேசணும்னு சொல்லி இருக்காரு, நீ போய் நேர்ல ஒரு நாள் பேசு என்று சொல்ல நான் எதுக்கு போய் நேர்ல பேசணும் என்னோட கண்டிஷனுக்கு ஓகே சொன்னாரா என்று கேட்க ஓகே சொன்ன மாதிரி தான் தெரியுது என்று மீனா சமாளிக்கிறார் இருந்தாலும் நீ நேர்ல போய் பேசு புரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கும் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் குடும்பத்தார் அனைவரையும் உட்கார வைத்த மனோஜ் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறார். உடனே முத்து கிண்டல் அடிக்க ரோகினி சொல்லுவாரு இருங்க என்று சொல்லி மனோஜிடம் சொல்லுங்கள் என்று சொல்லுகிறார். ஒரு முக்கியமான விஷயம் என்று சொல்ல எனக்கு தெரியும் என்று முத்து சொல்லிவிட்டு இவன் கம்பெனி தொடங்கிய 100 நாள் ஆகப் போகுது அதனை என்று கேட்கிறார். உடனே மனோஜ் ரோகினியும் யோசித்து அப்படியே 100 நாள் ஆகப்போகுதா என்று கேட்கின்றனர்.
பிறகு அதுவும் இல்லை என்று சொல்லி மனோஜ் சொல்லுகிறார். உடனே மீனா யோசித்து அவங்களோட கல்யாண நாள் வருதுங்க என்று முத்துவின் காதில் சொல்லுகிறார். ஓ அப்படியா இரண்டு கேடிகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நாள் என்று சொல்லு என்று சொன்னவுடன் விஜயா கோபப்பட பிறகு அவர்களின் திருமண நாள் என தெரிய வருகிறது. அந்த நாளில் பார்ட்டி வைக்கப் போவதாகவும் பிசினஸ் மீட்டிங் நடக்க போவதாகவும் சொல்லிவிட அண்ணாமலை சரி நல்ல விஷயம்தான் பண்ணு என்று சொல்லிவிட்டு, எந்த ஹால்ல எனக்கு சொல்லு என்று சொல்லிவிட்டு கிளம்பு விடுகிறார். விஜயாவிடம் மாத்திரை போடணும் தண்ணி எடுத்துக்கிட்டு வா என்று சொல்ல விஜயாவும் சென்று விடுகிறார். பிறகு ரவியையும், முத்துவையும் உங்ககிட்ட பேசணும் என்று மனோஜ் இருக்க வைக்கிறார். அதேபோல் ரோகினி ஸ்ருதி மீனாவிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார்.
மனோஜ் இரண்டு பேரையும் ரூமை வர வைத்து பேசுகிறார் இந்த டீலர்ஷிப் கிடைச்சா கோடியில் பிராபிட் பார்க்கலாம் நம்ம குடும்பம் எங்கேயோ போயிடும் என்றெல்லாம் பேச எப்பவுமே உன்ன பத்தி மட்டும்தான் யோசிப்ப,குடும்பத்தை பத்தி எல்லாம் யோசிக்கிற என்று முத்து கேட்க ரவி அவன் எதையோ சொல்ல வரான் கேட்போம் என்று சொல்லுகிறார்.
அந்த டீலர் வந்து பேக்ரவுண்ட் பத்தி கேட்பாங்க ன்னு சொல்லி இருக்காங்க உடனே முத்து சொல்ல வேண்டியது தானே நான் கார் ஓட்டுறேன், இன்னொரு தம்பி செஃப் வேலை பார்க்கிறேன் என்று சொல்லு என்று சொல்ல அதுதான் பிரச்சனையே, என்று சொல்லிவிட்டு, சொல்லி இருக்கேன் ஆனா இது மாதிரி இல்ல என்று சொன்னவுடன் ஒரு தம்பி ஐம்பது காருக்கு ஓனராகவும், இன்னொரு தம்பி ரெஸ்டாரன்ட் வச்சு நடத்துவதாகவும் சொல்லி இருக்கேன் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
எதுக்கு இப்படி சொல்லி இருக்க என்று கேட்க இப்படி எல்லாம் பண்ணா தான் எனக்கு அந்த டீலர்ஷிப் கிடைக்கும் நான் சொல்ற டிரஸ் கோட்ல தான் நீங்க வரணும் என்று சொல்லுகிறார். முத்து என்கிட்ட கோடு போட்ட டிரஸ் இருக்கு என்று சொல்ல, ரவி அது டிரஸ் கோடு பிசினஸ் மேனுங்க எல்லாம் போடுற மாதிரி இருக்கும் என்று சொல்ல அதுக்கெல்லாம் யார் செலவு பண்றது என்று முத்து கேட்கிறார். மனோஜ் அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.
முத்துவும் ரவியும் சம்மதிக்கிறார்களா? மனோஜ் என்ன சொல்லப் போகிறார் என்று இன்றைய பிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.