ரோகினி கொடுத்த பில்டப், அதிர்ச்சியில் விஜயா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவால் கிடைத்த விஷயத்தை தன்னால் கிடைத்தது போல வீட்டில் பில்டப் பண்ணி பேசுகிறார் ரோகிணி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் ரோகிணி ஸ்ருதியின் அம்மாவிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மேக்கப் பொருள் வாங்க வேண்டும் என இரண்டு லட்சம் கேட்கிறார் ஆனால் மனோஜ் நீ அதுக்கு வந்து நம்ம ஷோரூமில் இருந்தது நம்ம பிசினஸ் டெவலப் பண்ணலாம் என்று சொல்லி விடுகிறார் உன்னால கொடுக்க முடியலன்னா முடியலன்னு சொல்லி இப்ப எதுக்கு என்னோட தொழில் கேவலப்படுத்தி பேசிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல அதுக்காக சொல்லல ரோகினி ஒரு பவுடர் மை போய் 2 லட்ச ரூபா செலவு பண்ண முடியுமா என்று சொல்ல ரோகிணி டென்ஷன் ஆகிறார். உடனே முத்து கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வர மீனா அவரிடம் ஒரு சந்தோஷமான விஷயம் என சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க 275 வீட்டுக்கும் பூ ஆர்டர் வாங்கி கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் மீனா அதே மாதிரி எனக்கு ஒரு ஐடியா தோணுது அங்க நம்ம இன்னொரு காரை வாங்கி விட்டுட்டோனா வெளிய போறவங்க புக் பண்ணி இருப்பாங்க என்று சொல்ல மீனாவும் இது நல்ல ஐடியா தாங்க என்று சொல்லுகிறார் உடனே முத்துவுக்கு சவாரி வந்துவிட அவர் கிளம்பி விடுகிறார்.
மறுபக்கம் ரோகினி இந்த பணத்துக்கு என்ன பண்றது என யோசித்துக் கொண்டே ரூமில் இருந்து வெளியில் வர மீனா கூப்பிட்டு விசிட்டிங் கார்டு கொடுத்து 275 வீட்டுக்கு ஹோம் அப்ளையன்சஸ் பொருள் தேவைப்படுது அந்த சான்ஸ் உங்களுக்கு கேட்டிருக்க நீங்க போய் அந்த மேடத்தை பாருங்க என்று சொல்ல ரோகினி சந்தோஷப்படுகிறார் உடனே மீனாவிடம் இந்த விஷயத்தை இந்த வீட்ல வேற யாருகிட்டயும் நீங்க சொல்லாதீங்க ஆன்ட்டி என் மேல கோவமா இருக்காங்க இதை பண்ணா அவங்களோட கோபம் குறைஞ்சதும் என்று சொல்ல நீங்க சொல்லல நானும் நான் சொல்ல மாட்டேன் என மீனா சொல்ல ரோகினி சந்தோஷமாக கோகிலாவின் தோழியான பில்டரை சந்தித்து பேசுகிறார். அவருக்கும் ரோகினியை ஒரு பங்க்ஷனில் மேக்கப் போடும்போது பார்த்தது போல இருக்கிறது என சொல்லுகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்க இந்த ஆர்டரை நீங்க கரெக்டான வேலையில் பண்ணி கொடுத்தீங்கன்னா இதுக்கப்புறம் நாங்க எடுக்கற எல்லா ஆர்டரும் உங்களுக்கு கொடுக்கிறோம் என்று சொல்ல ரோகிணியும் சந்தோஷமாக கண்டிப்பா நாங்க உங்களுக்கு சூப்பரா பண்ணி தருவோம் என்று சொல்லுகிறார்.
சந்தோஷமாக ஷோரூமுக்கு வந்த ரோகினி மனோஜ் கட்டிப்பிடிக்கிறார் உடனே அவரது நண்பர் சந்தோஷ் இருக்கு அவர் திரும்பிக் கொள்கிறார் உடனே ஸ்வீட் எடுத்து மனோஜ்க்கு ஊட்டி விட ஒரு குட் நியூஸ் மனோஜ் நம்மளுக்கு ரொம்ப நல்ல விஷயம் நடந்திருக்கு என்று சொல்ல என்ன விஷயம் ரோகிணி என்று மனோஜ் கேட்கிறார் உடனே சந்தோஷ் இது கூட தெரியாதா ப்ரோ வாழ்த்துக்கள் என்று சொல்லுகிறார். நீ அப்பாவாகிட்ட ப்ரோ என்று சொல்ல மனோஜ் சந்தோஷப்படுகிறார் உடனே வேலை செய்யும் ஆட்களை சந்தோஷ கூப்பிட்டு சொல்ல அவர்கள் அனைவரும் கைத்தட்டுகின்றனர் உடனே மனோஜ் ரோகினியை தூக்கி சுத்துகிறார் உடனே ரோகினி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மனோஜ் என்று சொல்லி சொன்னவுடன் நீ எல்லாருக்கும் போங்க என்று அனுப்பி விடுகின்றனர் பிறகு விஷயத்தை மனோஜிடம் சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார் இது அம்மா கிட்ட சொன்னா உன் மேல இருக்கிற கோபம் குறையறதுக்கு வாய்ப்பு இருக்கு என்று சொல்ல கண்டிப்பா மனோஜ் நம்ப ஒரு புடவை வாங்கிட்டு போய் ஆன்ட்டி கிட்ட விஷயத்தை சொல்லலாம் என்று முடிவெடுத்து வீட்டுக்கு வருகின்றனர்.
வந்தவுடன் விஜயா மற்றும் அண்ணாமலைக்கு ஸ்வீட் கொடுத்துவிட்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர் பிறகு குடும்பத்தினர் என்ன கேட்கின்றனர்? அதற்கு மனோஜ் ரோகினியின் பதில் என்ன?விஜயா என சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

