சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதானா.. ஸ்கிரிப்ட் ரைட்டர் சொன்ன தகவல்..!
சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஸ்கிரிப் ரைட்டர் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பிரவுன் மணி ரோகினி குறித்த உண்மையை சொல்ல அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். மணி சொன்னதை கேட்ட விஜயா கோபத்தில் ரோகினி தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளுகிறார்.
பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் தற்போது நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சீரியல் ஸ்கிரிப்ட் ரைட்டர் குரு சம்பத்குமார் இந்த சீரியல் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது ரோகினி கதாபாத்திரத்திற்கு ஒரு மகன் இருக்கும் விஷயம் இன்னொரு லீட் வைத்துவிட்டு இந்த விஷயத்தை உடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது மட்டும் இல்லாமல் முதலில் இந்த சீரியலுக்கு சின்ன சின்ன ஆசை என்று தான் பெயர் வைத்தோம் ஆனால் பிறகுதான் சிறகடிக்க ஆசை என்ற பெயர் வைத்ததாகவும் சொல்லிருக்கிறார்.
