திருமணத்திற்கு சம்மதித்த சீதா, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
திருமணத்திற்கு சீதா சம்மதிக்க, முத்து வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஓட்டுபவர்களிடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார் என்ன பூக்காரமா இந்த பக்கம் வந்திருக்கீங்க என்று கேட்க எங்க டிரைவர் சவாரிக்க போகாமல் நின்று இருக்கீங்க என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நண்பரிடம் உங்க பொண்ணு டியூஷன் போறாங்களா என்றெல்லாம் விசாரிக்க போராமா இப்ப எந்த தப்பு பண்றது இல்லை என்று சொல்லுகிறார். சரி அவங்க பேசட்டும் போகலாம் வாங்க என்று அவர்கள் கிளம்ப என்ன ஆச்சு மீனா எதுக்கு வந்திருக்க என்று கேட்கிறார். அது ஒன்னும் இல்ல கோவிலுக்கு வரவங்க டெய்லியும் சீதாவை பார்த்து இருக்காங்க இந்த மாதிரி ஒரு பொண்ணு தான் மருமகளா வரணும்னு ஆசைப்படுறத அம்மா கிட்ட சொல்லி இருக்காங்க உங்களுடைய விருப்பமோ என்னோட விருப்பத்தை கேட்டுட்டு பொண்ணு பார்க்க வர சொல்லலான்னு சொல்லி இருக்காங்க அதனால நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்கிறார்.
அதற்கு முத்து எதுக்கு இவ்வளவு சீக்கிரம் பண்ணனும் இப்பதான் படிச்சிட்டு வேலைக்கு போய் இருக்கு இந்த காலத்துல பணத்தை நம்பறவங்களுக்கு இது மாதிரி நல்ல பொண்ணு இருந்தா போதும் நினைக்கிறவங்க நல்ல விஷயம் தான் என்று சொல்ல உடனே அதெல்லாம் விடுங்க நான் அவளை பேசி சம்மதிக்க வைத்து விடுவேன் இன்னிக்கி நீங்க சொன்னா தான் சாயந்திரம் வர சொல்ல முடியும் என்று சொல்லுகின்றனர். சரி வந்து முதல்ல பாக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்ல மீனாவும் சரி நாமக்கு கால் பண்ண சொல்லிட்டேன் என்று கிளம்புகிறார்.
வீட்டில் முத்துவுக்கு காபி கொடுக்க மீனாவையும் உட்காரக் குடி என்று சொல்ல அந்த நேரம் பார்த்து மனோஜ் கோவமாக வீட்டுக்கு வருகிறார். என்னாச்சு என்று கேட்க முத்துவாள எனக்கு அம்பதாயிரம் நஷ்டம் ஆயிடுச்சு அதனால இந்த மாசம் நான் உனக்கு ஐம்பதாயிரம் தர மாட்டேன் என்று சொல்ல என்ன விஷயம் என்று விஜயாவும் அண்ணாமலையும் கேட்கின்றனர். இவன் அந்த பீம் பாய் அடிச்சதுனால அவன் ஆஸ்பிட்டல் செலவுன்னு சொல்லி 50 ஆயிரத்துக்கு பொருள் எடுத்துட்டு போயிட்டான் இதனால எனக்கு நஷ்டம் ஆயிடுச்சு. என்று சொல்ல அதற்கு முத்து அதுக்கு எப்படி நான் காரணமாக முடியும் நீ என்னை அடிக்க ஆள கூட்டிட்டு வந்த நான் அவன அடிச்சேன் அவ்வளவுதான் என்று சொல்ல மீண்டும் மனோஜ் நீ தான் காரணம் என்று அழுத்தமாக சொல்லுகிறார்.
உடனே அண்ணாமலை மாச மாசம் எதுனா ஒரு காரணத்தை சொல்லிக்கிட்டு வராத, என்று சொல்ல ரோகிணி அதுதான் இந்த மாசம் நஷ்டம் ஆயிடுச்சுன்னு சொல்ற இல்ல அடுத்த மாசம் கொடுத்துருவாறு அதுக்கு நான் கேரண்டி என்று சொன்ன நீ அவனோட கொஞ்சம் ரோஷக்காரி தான் அதனால உன்னை நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு ஓகேபா என்று சொல்லுகிறார். உடனே மனோஜிடம் அண்ணாமலை அடுத்த மாசம் ஒரு லட்சம் கொடுத்துடு என்று சொல்ல மனோஜ் கோபமாக உள்ளே சென்று விடுகிறார்.
மறுபக்கம் கோபமாக வீட்டுக்கு வரும் சீதா யாரு கேட்ட இது மாதிரி முடிவு எடுக்குறீங்க எனக்கு எதுக்கு இப்ப கல்யாணம் என்று கோபப்படுகிறார். அந்த நேரம் பார்த்து முத்துவும்,மீனாவும் வர நீ கத்திக்கிட்டு இருக்கிறது வெளியேறுக்க கேக்குது என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு எதுக்கு இப்ப கல்யாணம் நானே இப்பதான் படிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கேன் என்று சொல்ல முத்து கல்யாண வேணாம்னா ஏதாவது லவ் இருக்கோ என்று கேட்க உடனே சீதாவின் அம்மா அவரை மிரட்டுகிறார் அத்தை அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நம்ம காலத்துல தான் எல்லாம் ஒன்னும் இல்ல இப்பல்லாம் வந்து இதெல்லாம் சாதாரணமாயிடுச்சு என்று கேட்க அப்படி ஏதாவது இருக்கா என்று கேட்க சீதாவும் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லனா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுகிறார் உடனே மீனா எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்றேனு சொல்லு என்று கேட்கிறார்.
முத்து சீதா சொல்றதும் சரிதானே என்று சொல்ல உடனே சீதாவின் அம்மா அப்படி இல்ல மாப்ள ஏழைகளுக்கு கடன் என்பது கூடவே பிறந்தது அதனால இப்ப இருக்குற கடனடைச்சாலும் இவளோட கல்யாணத்துக்கு கடன் வாங்கி தான் ஆகணும். அதப்பத்தி இப்ப எதுக்கு யோசிக்கணும் வரன் நல்ல சம்பந்தமா நல்ல விஷயமா இருந்தா சந்தோஷம் தானே என்று சொல்ல இதுவும் கரெக்டு தான் என்று சொல்லுகிறார்.
உடனே சத்தியா என்ன மாமா எல்லாரும் சொல்றதுக்கும் சரின்னு சொல்றீங்க அப்ப நீங்க என்ன சொல்ல போறீங்க என்று கேட்க நான் என்ன சொல்ல போறேன் பொண்டாட்டி முடிவு தான் என்று சொல்லிவிட்டு முதலில் வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சீதாவிடம் சொல்ல சீதாவும் சம்மதிக்கிறார்.
பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரர் வர என்ன நடக்கிறது?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.