அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update

நேற்றைய எபிசோடில் சூர்யா இவ்வளவு குடித்தும் அவங்க அம்மா கிட்ட இவ்வளவு பிரச்சனை பண்ணியும் அவன் மேல எனக்கு எந்த கோபமும் வரலைன்னா என் சூர்யா அப்படி இருந்தான் என்று ஃபிளாஷ்பேக் சொல்லுகிறார். அதில் சூர்யா ஆபீஸில் சுறுசுறுப்பாகவும், ஒரு பொண்ணை காதலித்து அவருடன் பைக்கில் வந்து ஒரு காபி ஷாப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருப்பதை சுந்தரவல்லி பார்த்து வருகிறார். உடனே சுந்தரவல்லி சூர்யா வீட்டுக்கு வந்தவுடன் அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது, என்று எவ்வளவு சொல்லியும் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை உங்களுக்காக நான் அந்த பொண்ண லவ் பண்ணாம இருக்க முடியாது என்று சுந்தரவல்லி எவ்வளவு சொல்லியும் சூர்யா மறுத்துவிட்டு மேலே சென்று விடுகிறார். உடனே சுந்தரவல்லி ஒரு பேக் ஃபுல்லா பணத்தை மாதவியின் கணவரிடம் கொடுத்து அந்தப் பொண்ணு இனிமே சூர்யா பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்று அனுப்பி வைக்கிறார்.

ஆனால் அங்கு வந்து பார்க்கும் போது நாலு பெண்களை போலீஸ் கைது செய்து ஜிபில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். அது குறித்து மாதவியின் கணவர் விசாரிக்கும் போது நல்லவங்க மாதிரி இருந்துட்டு வீட்டுக்குள்ளே விபச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல அங்கிருந்து அவர் கிளம்பி வந்து விடுகிறார். உடனே நியூஸ் பேப்பரில் வந்த அந்த விளம்பரத்தை சூர்யாவிடம் காட்டுகின்றனர். விபச்சாரத்தால் கைது செய்யப்பட்ட பெண்ணின் குடும்பம் தற்கொலை செய்து கொண்டதாக பேப்பரில் வருகிறது. இதனைப் பார்த்து சூர்யா அதிர்ச்சியாகி குடிக்க ஆரம்பிக்கிறார். இதனால தான் அவன் குடிக்க ஆரம்பிச்சான். அந்தப் பொண்ணோட ஸ்டேட்டஸ் குறைவெண்றதுனால தானே இவ்வளவு பண்ணீங்க என்று இவ்வளவு பண்ணிக்கிட்டு இருக்கான். அவன் ஒரு நாள் மாறுவான் என்று சொல்ல, நீங்க அவரோட நிம்மதி போய்டுச்சுன்னு பேசுறீங்க ஆனா இன்னைக்கு என்னோட நிம்மதி போய்டுச்சு, மானத்தோட வாழ பணமோ அந்தஸ்து தேவை கிடையாது,என நந்தினி சொல்லுகிறார்.

சூர்யாக்கு வெளியே எவ்வளவு எதிரிங்க இருக்காங்கன்னு தெரியும் ஆனா வீட்டுக்குள்ள எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியாது எல்லா நேரமும் அவன் கூட என்னால் இருக்க முடியாதும்மா அவனுக்கு ஒரு நல்ல பொண்ணு கூட இருக்கணும்னு நான் நினைக்கிறேன், இங்க வந்த ஜோசியரு உங்க குல தெய்வத்தை போய் பாருங்க அந்த கருப்பசாமியை உங்க மருமகள காட்டுவார் என்று சொன்னாரு அந்த நம்பிக்கையில் தான் நாங்க வந்தோம் இப்பயும் அந்த சாமி அனுப்புன பொண்ணா தான் உன்ன நான் பாக்குறேன். கண்டிப்பா நீ அவன் கூட இருந்தால் சூர்யா குடியில இருந்து வெளியே வந்துருவான் என்று பேசுகிறார். உடனே இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் எதையும் கேட்டதில்லை முதல் முறையா உன்கிட்ட கையெடுத்து கும்பிட்டு கேக்குற இந்த குடும்பத்தை விட்டு போயிடாத என்று சொல்லுகிறார். உடனே சிங்காரம் ஐயா நீங்க கையை இறக்குங்க நீங்க கஞ்சி ஊத்துற கை கெஞ்ச கூடாது என்று சொல்லிவிட்டு என்னை நந்தினி இப்படி அய்யாவு கெஞ்ச விட்டுக்கிட்டு இருக்க என்று பேச உடனே நந்தினி எனக்கு சுயமரியாதை என்னோட வாழ்க்கையை விட என் தங்கச்சி ரெண்டு பேரும் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.நம்ம இங்க இருந்து போயிடலாம் வா எங்களை மன்னிச்சுடுங்க ஐயா என்று சொல்லிவிட்டு சிங்காரத்திடம் இனிமே நம்ம ஐயாவோட தோப்புல இருக்க முடியாது பா நம்ம வேற ஒரு இடத்தை தேடிக்கணும் கிளம்பலாம் என்று முடிவோடு இருக்கிறார்.

எங்க வாழ்க்கையே ஆரம்பிச்சு வச்சது நீங்க தான் ஆனா முதல் தடவையா உங்க வார்த்த மீறி கிளம்பனும்னு என் பொண்ணு முடிவெடுத்து நிற்கிறது, எங்களுக்கு சோறு போடுற முதலாளி ஒன்னு கேட்டு எங்களால செய்ய முடியாமல் நிற்கும் போதும் ரொம்ப மனசு கஷ்டமா இருக்குது நீங்க நந்தினியை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைங்க ஐயா நாங்க கிளம்புறேன் என்று சொன்ன எதுவும் பேசாமல் அருணாச்சலம் கையெடுத்துக் கும்பிடுகிறார். உடனே சிங்காரமும் நந்தினியும் கிளம்பலாம்பா என்று படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருக்க திடீரென்று சிங்காரத்திற்கு நெஞ்சு வலி வருகிறது. சிங்காரம் வலியில் துடிக்க நந்தினி அப்பா, அப்பா அப்பா என்னாச்சு என கதறி அழுகிறார்.

உடனே அருணாச்சலம் மாதவி மாதவியின் கணவர் என மூவரும் வர அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனோம் என்று சொன்னவுடன் மூவரும் நந்தினியுடன் அவரை ஹாஸ்பிடலில் கூட்டி வந்து சேர்க்கின்றனர். ஐயா இங்க வந்ததிலிருந்து அப்பாவுக்கு எதுவுமே சரியில்ல வந்தவுடனே கீழ விழுந்து கால் அடிபட்டுடுச்சு ,மண்டபத்துல மனசுக்கு வந்ததை சொல்லி அசிங்கப்பட்டு விட்டார். கடைசில இந்த விஷயம் நடந்ததுனால இப்படி ஆகிட்டாரு. பத்து வருஷமா எங்கள அம்மா இல்லாமல் வளர்த்தாரு ஆனா அவரை இப்படி பார்க்கும்போது கஷ்டமா இருக்கு ஐயா பாவம் ஐயா அவர் மனசுல என்னென்ன ஓடுதோ எனக்கு தெரியல என்று அவ அருணாச்சலம் ஆறுதல் சொல்லுகிறார். உடனே டாக்டர் வெளியில் வந்து அவருக்கு ஷாக்கான விஷயம் ஏதாவது சொன்னீங்களா என்று கேட்க ஆமா சார் இன்னைக்கு நடந்தது எல்லாமே ஷாக் ஆன விஷயம்தான் என்று சொல்ல என்ன ஆச்சு என்று கேட்கிறார் இப்போ ஒன்னும் இல்ல நார்மலா தான் இருக்காரு கொஞ்ச நேரம் கழிச்சு போய் பார்த்துக்கோங்க ஆனா இனிமேல் அதிர்ச்சியான விஷயம் எதுவும் சொல்லாதீங்க அவர் தாங்க மாட்டார் என்று சொல்லிவிட்டு டாக்டர்க கிளம்பி விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் உங்க பொண்ணு யார் வீட்டு கல்யாணத்துக்கோ போகும்போது அங்க திடீர்னு புடிச்சி கல்யாணம் பண்ணி வச்சுட்டா நீங்க என்னங்கய்யா பண்ணுவீங்க என்று அருணாச்சலத்திடம் நந்தினி கேட்கிறார்.

எல்லா தப்பும் உன் மேல தான் இருக்கு என்று அர்ச்சனாவிடம் அம்மா சொல்லுகிறார். அவன் வாழ்க்கையில ஏற்பட்ட காயத்துக்கு இன்னொரு பொண்ணு தான் சரி செய்ய முடியும் நான் நினைக்கிறேன் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update