Web Ads

முத்து தொடங்கிய புதிய பிசினஸ், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார்.

SiragadaikkaAasai Serial Today Episode Update 13-02-25
SiragadaikkaAasai Serial Today Episode Update 13-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் வித்யா முருகனின் போனை கேட்க அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே கொடுத்து விட்டார். என்ன உடனே கொடுத்துட்டீங்க என்று வித்யா கேட்க உங்களுக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்ல வித்யா வெக்கப்படுகிறார். முருகன் போனை கொடுத்துவிட்டு கிளம்பிய பிறகு ரூமுக்குள் வந்து மீனாவிற்கு ஃபோன் போடுகிறார்.

நீங்க சொன்ன மாதிரி போன வாங்கிட்டேன் அப்புறம் யோசிக்காம குடுத்துட்டாரு இப்ப என்ன பண்றது என்று கேட்க எனக்கு தெரிஞ்சு அவரு ரொம்ப நல்லவரா தான் இருப்பாரு யாருமே அவ்வளவு சீக்கிரம் அவங்க போனை கொடுக்க மாட்டாங்க அவர்கிட்ட திருப்பி கொடுத்துட்டு கொடுக்கும்போது போன் நம்பரை கொடுத்துட்டு பேச ஆரம்பிங்க என்று சொல்லுகிறார் என்று சொல்றீங்களா என்று கேட்க ஆமா ஒருத்தர் பழகுவதை வச்சு அவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சுக்கலாம் என்று சொல்லி போனை வைக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து ரோகினியின் அம்மா அங்கு வர வித்யா அவரை வரவேற்று உட்கார வைக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் ரோகினியும் பரபரப்பாக வந்த நகைகளை கேட்க இது கிருஷ் எதிர்காலத்துக்காக வச்சிருந்தான்னு சொன்ன இப்ப எதுக்கு எடுத்துட்டு வர சொன்னேன் என்று கேட்க ஷோரூம்ல ஜிஎஸ்டி கட்டாம மனோஜ் விட்டுட்டான் அதுக்காக அர்ஜெண்டா தேவைப்படுது என்று சொல்லி வித்யாவையும் அழைத்துக் கொண்டு பேங்க் இருக்கு செல்கிறார். மறுபக்கம் அதிகாரிகள் வந்து மனோஜிடம் என்ன பணம் ரெடி பண்ணிட்டீங்களா டைம் ஆயிடுச்சு இதுக்கு அப்புறம் வெயிட் பண்ண முடியாது சீல் வைத்துவிடு வேண்டியதுதான் என்று முடிவெடுத்து கிளம்ப ரோகினி கரெக்டான நேரத்தில் வந்து மனோஜ் அக்கவுண்டில் பணம் போட்டு விட்டதாகவும் செக் கொடுக்க சொல்லுகிறார் பிறகு இருவரும் கையெழுத்து போட்டு கொடுக்க அவர்கள் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று மார்னிங் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

பிறகு முத்து வீட்டுக்கு வர மீனாவை கூப்பிட்டு அப்பாவை விட போன இடத்தில் க்ரிஷ் மற்றும் அவர்களது பாட்டியை சந்தித்த விஷயத்தை கூறுகிறார். மீனா நம்பளும் போய் ஒரு நாளும் உங்களை நேரில் பார்க்கலாம் என்று சொல்ல மாமா விசாரிச்ச பெருங்களத்தூர் பக்கத்துல இருக்காங்களா என்று சொல்ல இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகினி இந்த அம்மா எதுக்கு இருக்கிற இடத்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கன்னு தெரியல என்று டென்ஷனாகிறார். அவங்களுக்கு நம்ம மேல இருக்கிற கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா பேசி சரி பண்ணிடலாம் என பேசிக்கொண்டு இருக்கா அந்த நேரம் பார்த்து ரவியும் சுருதியும் வருகின்றனர்.

ஸ்ருதி ரவியின் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்திருப்பதாக சொல்ல அதற்கு முத்து சமைக்கவே தெரியாது சேர்ந்துட்டு அப்புறம் எப்படி கஸ்டமர் வருவாங்க என்று கேட்க வேலைக்கு தான் சேர்ந்த ஆனா நான் சமைக்கல ஆர்டர் எடுக்க என்று சொல்லுகிறார். அந்த வேலையும் செஞ்சுட்டு இதையும் செய்ய கஷ்டமா இருக்காதா என்று கேட்க எனக்கு அதைவிட ரவி கூட டைம் ஸ்பென்ட் பண்றது ஜாலியா இருக்கு என்று சொல்லி பேசி கொள்கின்றனர் பிறகு காலையில நம்ம வீட்டு வாசலில் காருக்கு பூஜை பண்ணி தொழில் ஆரம்பிக்க போறோம் வந்துருங்க என்று சொல்ல நம்ம வீட்ல தானே சரி என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர்.

மறுநாள் காலையில் அண்ணாமலையை அழைத்து வந்த முத்து போர்ட் காட்டுகிறார் அதில் அண்ணாமலையின் பெயர் இருப்பதால் உன் பெயரிலேயே ஆரம்பித்து இருக்க வேண்டியதுதானே முத்து என்று சொல்லுகிறார். இல்லப்பா உன் பேர்ல இருக்குறது தான் ராசி என்று சொல்லுகிறார். பூஜை பண்ணி ஆரம்பிச்சு வைப்பா என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை கூப்பிடுகிறார் முதலில் மறுத்த இருந்த விஜயா பிறகு அண்ணாமலை நம்ம பையன் ஒரு நல்ல விஷயம் செய்றான் அதுக்கு ஆரம்பிச்சு வை சீர்வாதம் பண்ணு என்று சொல்லி சொன்னவுடன் ஆரத்தி எடுத்து ஆரம்பித்து வைக்கிறார்.

பிறகு அனைவரும் ஒன்றாக உட்காந்து பேசிக் கொண்டிருக்க முத்து என்ன கேட்கிறார்?அதற்கு மீனாவின் பதில் என்ன? விஜயா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadaikkaAasai Serial Today Episode Update 13-02-25
SiragadaikkaAasai Serial Today Episode Update 13-02-25