பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Simbu Salary for Bigg Boss Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார்.

இதனையடுத்து இந்த வாரம் முதல் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இன்னும் ஐந்து வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் வாரம் ஒரு நாள் மட்டும் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் என்ற வீதத்தில் ஐந்து நாளைக்கு சிம்புவுக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.