Simbu Salary

Simbu Salary : உடல் எடையை குறைத்து சிம்பு இறக்கிய எடைக்கு சமமாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் புலம்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தில் உடல் எடை கூடி குண்டாக மாறி விட்டதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர்.

இதனால் ரசிகர்கள் பழையபடி ஸ்லிம்மாக மாறுங்க என கூறி வர லண்டன் சென்று உடல் எடையை குறைத்து விட்டு ஸ்லிம்மாக நாடு திரும்பினார் சிம்பு.

நாடு திரும்பியதும் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள மாநாடு படத்தை தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக சிம்பு ரூ 6 கோடி அட்வான்ஸ் வாங்கி இருப்பது மட்டுமில்லாமல் படத்தின் வசூலிலும் பங்கு கேட்டு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் பெரிய நடிகர்கள் மட்டும் தான் இப்படி செய்வார்கள் இப்போது சிம்புவுமா ? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.